IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்? முதலிடத்தில் இந்த வீரரா?

Highest Run, Wicket Taker in IPL: ஐபிஎல் 2026ன் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல் அதிக ரன் மற்றும் விக்கெட் வீழ்த்திய நபர்களில் பட்டியலை தெரிந்து கொள்வோம்.

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்? முதலிடத்தில் இந்த வீரரா?

விராட் கோலி - யுஸ்வேந்திர சாஹல்

Published: 

19 Mar 2026 16:45 PM

 IST

ஐபிஎல் 2026 (IPL 2026) சீசன் வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த சீசனிலும் பல இளம் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்ட ஒரு சில அனுபவமிக்க பேட்ஸ்மேன்களும் தங்கள் பலத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளனர். ஐபிஎல் 2026ன் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல் அதிக ரன் மற்றும் விக்கெட் வீழ்த்திய நபர்களில் பட்டியலை தெரிந்து கொள்வோம்.

அதிக விக்கெட்டுகள்:

யுஸ்வேந்திர சாஹல்

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் யுஸ்வேந்திர சாஹல் உள்ளார். மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள சஹால், ஐபிஎல்லில் இதுவரை 174 போட்டிகளில் விளையாடி 221 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2013-ல் ஐபிஎல்-லில் அறிமுகமானதிலிருந்து சாஹல், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஐபிஎல்லில் யுஸ்வேந்திர சாஹல் 5/40 என்ற சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.

ALSO READ: பெங்களூருவில் போட்டிகளை நடத்த அரசு அனுமதி – ரசிகர்கள் உற்சாகம்

புவனேஷ்வர் குமார்

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார் 2வது இடத்தில் உள்ளார். ஐபிஎல்லில் கடந்த 2011ம் ஆண்டு முதல் விளையாடி வரும் புவனேஷ்வர் குமார் 190 போட்டிகளில் 198 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் புவனேஷ்வர் குமார் 5/19 என்ற சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.

அதிக ரன்கள்:

விராட் கோலி

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல்லில் இதுவரை 267 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 8 சதம் மற்றும் 63 அரைசதம் உள்பட 8661 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி ஐபிஎல்லில் தனது அதிகபட்ச ஸ்கோரான 113 ரன்களை பதிவு செய்துள்ளார்.

ALSO READ: ஃபின் ஆலன் முதல் முசரபானி வரை… ஐபிஎல் 2026-ல் அறிமுகமாக வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள்!

ரோஹித் சர்மா

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ரோஹித் சர்மா 2வது இடத்தில் உள்ளார். இதுவரை ஐபிஎல்லில் 272 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 2 சதம் மற்றும் 47 அரைசதங்களுடன் 7046 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் சர்மா ஐபிஎல்லில் தனது அதிகபட்ச ஸ்கோரான 109 ரன்களை பதிவு செய்துள்ளார். இதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்