IPL 2026: கலக்கவிருக்கும் இளம் சிட்டுகள்.. ஐபிஎல் 2026ல் விளையாடப்போகும் டாப் 5 இளம் வீரர்கள்!

IPL 2026 Five Youngest Players: ஐபிஎல் போட்டியானது வைபவ் சூர்யவன்ஷி உள்பட இளம் வீரர்களுக்கு ஒரு வரபிரசாதமாகவே இருந்து வருகிறது. ஐபிஎல்லில் சாதித்த பல இளம் வீரர்கள் இன்று இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதன்படி, ஐபிஎல் இளைஞர்களுக்கான ஒரு போட்டி என்றே சொல்லலாம்.

IPL 2026: கலக்கவிருக்கும் இளம் சிட்டுகள்.. ஐபிஎல் 2026ல் விளையாடப்போகும் டாப் 5 இளம் வீரர்கள்!

இளம் வீரர்கள்

Published: 

19 Mar 2026 08:00 AM

 IST

ஐபிஎல் 19வது சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த சீசனின் முதல் கட்டமாக 10 அணிகளுக்கு இடையே மொத்தம் 20 போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு நாளைக்கு 2 போட்டிகள் என 4 போட்டிகளும் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டியானது வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) உள்பட இளம் வீரர்களுக்கு ஒரு வரபிரசாதமாகவே இருந்து வருகிறது. ஐபிஎல்லில் சாதித்த பல இளம் வீரர்கள் இன்று இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதன்படி, ஐபிஎல் இளைஞர்களுக்கான ஒரு போட்டி என்றே சொல்லலாம். இதுபோன்ற சூழ்நிலையில் 19-வது ஐபிஎல் சீசனில் விளையாடும் டாப் 5 இளம் வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஐபிஎல் 2026ல் மிக இளம் மற்றும் வயதான வீரர்கள் யார்? இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் என்ன?

வைபவ் சூர்யவன்ஷி:

வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் வரலாற்றிலேயே மிக இளம் வயது வீரர் ஆவார். வைபவ் தனது 14 வயது மற்றும் 23 நாட்களில் ஐபிஎல்-லில் அறிமுகமானார். ஐபிஎல் 2026 சீசனில் வைபவ் சூர்யவன்ஷி 15 வயதை எட்டுவார். கடந்த ஐபிஎல் 2025 சீசனில், வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிவேக சதத்தை வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதத்தை எட்டினார். வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல்லில் இதுவரை 7 போட்டிகளில் 206 ஸ்டிரைக் ரேட்டில் ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 252 ரன்கள் எடுத்தார்.

ஆயுஷ் மத்ரே:

2007ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பிறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேனான ஆயுஷ் மத்ரே, ஐபிஎல் 2026 தொடரில் விளையாடும் இரண்டாவது இளம் வீரர் ஆவார். தற்போது, ​​ஆயுஷுக்கு 18 வயது மற்றும் 160 நாட்கள் ஆகிறது. கடந்த ஐபிஎல் 2025 சீசனில் ஆயுஷ் மத்ரே மிகச் சிறப்பாக விளையாடினார். இதுவரை ஐபிஎல்லில் இதுவரை 7 போட்டிகளில் 188 ஸ்டிரைக் ரேட்டில் 240 ரன்கள் எடுத்தார். இந்த சீசனிலும் ஆயுஷிடம் இருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்க்கிறது.

சாஹில் பரிக்:

ஐபிஎல் 2026 தொடரில் பங்கேற்கும் 3வது இளம் வீரராக சாஹில் பரிக் இருப்பார். தற்போது, ​​சாஹில் பரிக்கு 18 வயது மற்றும் 199 நாட்கள் ஆகிறது. ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சாஹிலை ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியது. வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனில் சாஹிலிடமிருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்பார்க்கிறது.

சத்விக் தேஸ்வால்:

ஐபிஎல் 2026 ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சத்விக் தேஸ்வாலை ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியது. இந்த சீசனில் விளையாடும் 4வது இளம் வீரராக சத்விக் இருப்பார். சத்விக் தேஸ்வாலுக்கு 18 வயது மற்றும் 275 நாட்கள் ஆகிறது. சத்விக் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆடும் லெவனில் சத்விக்குக்கு வாய்ப்பு கிடைத்தால், தனது பந்துவீச்சால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: இம்பேக்ட் வீரராக களமிறங்குகிறாரா ரோஹித் சர்மா? மும்பை பயிற்சியாளர் விளக்கம்!

விஹான் மல்ஹோத்ரா:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தனது பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்த விஹான் மல்ஹோத்ரா, ஐபிஎல் 2026 தொடரில் பங்கேற்கும் 5வது இளம் வீரராக இருப்பார். விஹானுக்கு தற்போது 18 வயது மற்றும் 356 நாட்கள் ஆகிறது. அவரை ஆர்சிபி அணி மினி ஏலத்தில் ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்