AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: வெறும் 11 ரன்கள் மட்டும் போதும்.. மிகப்பெரிய சாதனையை படைக்கப்போகும் கோலி..!

Virat Kohli Record: விராட் கோலி தனது ஐபிஎல் வாழ்க்கையில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட இன்னும் 11 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் 11 ரன்கள் எடுப்பதன் மூலம், இத்தொடரில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். இது ஐபிஎல் வரலாற்றில் பெரிய சாதனையை உருவாக்கும்.

IPL 2026: வெறும் 11 ரன்கள் மட்டும் போதும்.. மிகப்பெரிய சாதனையை படைக்கப்போகும் கோலி..!
விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Apr 2026 17:21 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 39வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 27ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்தநிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக வெறும் 11 ரன்கள் எடுத்தாலே விராட் கோலி வரலாறு படைக்க முடியும். இந்தச் சாதனையை படைக்க ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ். தோனி (MS Dhoni) போன்ற ஜாம்பவான்களால் படைக்க நீண்ட நாட்கள் ஆகலாம்.  அப்படி இல்லையென்றால்,  படைக்காமலே போகலாம். அதன்படி, தற்போது ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரராக விராட் கோலி உள்ளார்.

ALSO READ: தீவிரமாகும் தோனியின் காயம்.. ஐபிஎல் 2026ல் விளையாடுவது சந்தேகமா? ஃபிளெமிங் கொடுத்த அப்டேட்!

11 ரன்கள் எடுத்தால் மிகப்பெரிய சாதனையை படைப்பார் கோலி:

விராட் கோலி தனது ஐபிஎல் வாழ்க்கையில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட இன்னும் 11 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் 11 ரன்கள் எடுப்பதன் மூலம், இத்தொடரில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். இது ஐபிஎல் வரலாற்றில் பெரிய சாதனையை உருவாக்கும். விராட் கோலி 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இத்தொடரின் வரலாற்றில் வேறு எந்த பேட்ஸ்மேனும் 8,000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கூட எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் 2026 சீசனிலும் கோலியின் பேட்டிங் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. விராட் கோலி இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 3 அரை சதங்கள் உட்பட, 54.67 சராசரி மற்றும் 163.18 ஸ்டிரைக் ரேட்டுடன் 328 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கோலி தற்போது 5வது இடத்தில் உள்ளார்.

ஐபிஎல்-இல் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள்

  • விராட் கோலி – 8989 ரன்கள் (274 போட்டிகள்)
  • ரோஹித் சர்மா – 7183 ரன்கள் (276 போட்டிகள்)
  • ஷிகர் தவான் – 6769 ரன்கள் (222 போட்டிகள்)
  • டேவிட் வார்னர் – 6565 ரன்கள் (184 போட்டிகள்)
  • கே.எல். ராகுல் – 5579 ரன்கள் (152 போட்டிகள்)

ALSO READ: தலையில் ஏற்பட்ட காயம்.. இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக லுங்கி என்கிடி விளையாடுவாரா?

விராட் கோலி ஐபிஎல் வாழ்க்கை:

விராட் கோலி தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 274 போட்டிகளில் விளையாடியுள்ளார். 266 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, கோலி  39.95 சராசரி மற்றும் 133.76 ஸ்டிரைக் ரேட்டுடன் 8989 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 8 சதங்கள் மற்றும் 66 அரை சதங்களை அடித்துள்ளார். ஐபிஎல்லில் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 113* ஆகும். 2008-ல் ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனிலிருந்தே விளையாடி வரும் சில வீரர்களில் கோலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்திலிருந்தே, ரன் குவிப்பில் கோலி தனது முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறார்.

Follow Us