AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: டாப் 3ல் ஹைதராபாத்.. பவர் காட்டும் பஞ்சாப்.. கடைசி இடத்தில் எந்த அணி?

IPL Points Table: ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆர்சிபி எட்டு புள்ளிகளையும், +1.171 என்ற நிகர ரன் விகிதத்தையும் கொண்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தாங்கள் ஆடிய 7 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று மூன்றில் தோல்வியடைந்துள்ளது.

IPL 2026: டாப் 3ல் ஹைதராபாத்.. பவர் காட்டும் பஞ்சாப்.. கடைசி இடத்தில் எந்த அணி?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Image Source: SRH/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Apr 2026 14:36 PM IST

இந்தியன் பிரீமியர் லீக் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 ஏப்ரல் 22ம் தேதி நடந்த 31வது போட்டியில் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals) அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி , புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. இது நடப்பு சீசனில் ஹைதராபாத்தின் 4வது மற்றும் தொடர்ச்சியான 3வது வெற்றியாகும். இதற்கிடையில், ஐபிஎல் 2026 தொடரில் தனது 3வது போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது. புள்ளிப் பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: விக்கெட் கீப்பிங்கை கையில் எடுத்த எம்.எஸ்.தோனி.. மும்பைக்கு எதிராக விளையாடுவது உறுதி..?

ஐபிஎல் புள்ளி அட்டவணையில் முதல் 4 அணிகள்:

பஞ்சாப் கிங்ஸ் தற்போது புள்ளி அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு ஐபிஎல் 2026 பதிப்பில் ஒரு போட்டியில் கூட தோற்காத அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி கைவிடப்பட்டது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் 11 புள்ளிகளை கொண்டு +1.420 என்ற நிகர ரன் ரேட்டுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆர்சிபி எட்டு புள்ளிகளையும், +1.171 என்ற நிகர ரன் விகிதத்தையும் கொண்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தாங்கள் ஆடிய 7 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று மூன்றில் தோல்வியடைந்துள்ளது. 4ம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது, ஆனால் எஸ்ஆர்ஹெச் (+0.820) அணி, ஆர்ஆர் (+0.599) அணியை விட சிறந்த நிகர ரன் ரேட்டை கொண்டுள்ளது. ராஜஸ்தான் அணி, ஆடிய ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியுடன் 4வது இடத்தில் உள்ளது.

5 முதல் 10 ஆம் நிலை:

நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேற்று அதாவது 2026 ஏப்ரல் 22ம் தேதி தனது மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியும் தாங்கள் ஆடிய ஆறு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று மூன்றில் தோல்வியடைந்துள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் தலா ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால் நிகர ரன் ரேட் அடிப்படையில், டெல்லி (-0.130) 5வது இடத்திலும், குஜராத் (-0.821) 6வது இடத்திலும் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் முறையே 7வது, 8வது மற்றும் 9வது இடங்களில் உள்ளன. இந்த 3 அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றி பெற்று நான்கில் தோல்வியடைந்துள்ளன. நிகர ரன் ரேட்டை பொறுத்தவரை, MI (+0.067) அணி CSK (-0.780) மற்றும் LSG (-1.171) அணிகளை விட முன்னிலையில் உள்ளது.

ALSO READ: ஹைதராபாத்திற்கு எதிராக கரை சேராத டெல்லி.. சூப்பர் பிளான் போட்டு தூக்கிய இஷான் கிஷன் படை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளி அட்டவணையில் 10வது இடத்தில் உள்ளது. கேகேஆர் ஆடிய ஏழு போட்டிகளில் ஐந்தில் தோல்வியும், ஒரு போட்டி கைவிடப்பட்டும், ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ளது. தற்போது மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

Follow Us