RCB vs KKR: முதல் போட்டியில் தடைப்போட்ட மழை.. ஆர்சிபிக்கு அதிர்ஷ்டம்! கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் சிக்கல்!

RCB vs KKR Match Abandoned: ஐபிஎல் 2025 இல் பெங்களூருவில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 58வது போட்டி, தொடர்ந்து பெய்த மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால், பிளே ஆஃப் வாய்ப்புக்காக போராடிய கொல்கத்தா அணிக்கு பெரும் அதிர்ச்சி. பெங்களூரு அணி ஏற்கனவே பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்துவிட்டது. மழையால் டாஸ் கூட நடக்கவில்லை. கொல்கத்தா அணியின் பிளே ஆஃப் கனவு இந்த மழையால் சிதறியது.

RCB vs KKR: முதல் போட்டியில் தடைப்போட்ட மழை.. ஆர்சிபிக்கு அதிர்ஷ்டம்! கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் சிக்கல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Published: 

17 May 2025 23:00 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிகளுக்கு இடையிலான 58வ போட்டியானது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போட முடியவில்லை. இந்தப் போட்டி அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் செல்ல முக்கியமானதாக இருந்தது. அதாவது, இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் பந்தயத்தில் நிலைத்திருக்க முடியும். மறுபுறம், பெங்களூரு அணி பிளேஆஃப்களில் தனது இடத்தை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்டது.

முதல் போட்டியில் தடைப்போட்ட மழை:

இந்தியா பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு, ஐபிஎல் 2025ல் சீசனானது இன்று அதாவது 2025 மே 17ம் தேதி தொடங்க இருந்தது. இதனால், ஐபிஎல் போட்டியை மீண்டும் காண வேண்டும் என்பதற்காக, எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டியை காண ரசிகர்கள் குவிந்திருந்தனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வு பெற்ற பிறகு, பல ரசிகர்கள் கோலியின் டெஸ்ட் நிர வெள்ளை ஜெர்சியுடன் வந்திருந்தனர். ஆனால் அவர்களால் ஒரு கணம் கூட விராட்டை ஸ்டேடியத்தில் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

கொல்கத்தா அணிக்கு பிளே ஆஃப் சிக்கல்:

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் ஐபிஎல் 2025 சீசனில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முக்கியமானதாக இருந்தது. ஆனால், அதற்கும் மழை ஒரு வில்லனாக மாறிவிட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இன்று தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு இருந்தது. அதுவும் இப்போது மழையுடன் தண்ணீராக போய்விட்டது. ஐபிஎல் 2025 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்று இப்போது 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதில், 2 போட்டிகள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது ஐபிஎல் 2025 சீசனில் கொல்கத்தா அணிக்கு ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. அதில் வெற்றி பெற்றால் கூட கொல்கத்தா அணிக்கு 14 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். இது பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு போதுமானதாக அமையாது.