India’s New Test Captain: கேப்டன்ஷியை வேண்டாம் என்ற பும்ரா.. சுப்மன் கில்..? ரிஷப் பண்ட்..? கடும் போட்டி..!
India vs England Test series: ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனால், சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக பும்ரா இந்த முடிவை எடுத்துள்ளார். அடுத்த வாரம் தேர்வுக்குழு கூடி புதிய கேப்டனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா (Rohit Sharma) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வருவார் என அனைவராலும் கருதப்பட்டது. இப்போது அடுத்த கேப்டன் போட்டியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) தானாகவே தன்னை விலக்கிக் கொண்டதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பிறகு, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாகும் போட்டியில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் பிரபல ஊடக சேனலான ஸ்கை ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஜஸ்பிரித் பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக வர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள 5 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டாரா..?
பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட ஜஸ்பிரித் பும்ரா விரும்பவில்லை என பிசிசிஐயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து விளையாடக்கூடிய ஒரு இளம் வீரரை கேப்டன் பதவிக்கு தேர்வுக்குழு தேர்வு செய்ய விருப்பம் காட்டி வருகிறது. அதன்படி, இளம் வீரர்களான சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரேனும் ஒருவரை கேப்டனாக நியமிக்க திட்டமிட்டு வருகிறது. புதிய கேப்டன் குறித்து அடுத்த வாரம் தேர்வாளர்கள் மத்தியில் ஒரு கூட்டம் நடத்தப்படலாம் என்றும், இந்த 2 பேரில் யாருக்கு கேப்டன் பதவி வழங்கப்படவில்லையோ, அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ரோஹித் சர்மாவின் அடுத்த வாரிசு யார்..?<
BCCI wanted to make Rishabh Pant Test Captain But Gautam Gambhir is demanding Shubman Gill, Gambhir was impressed with gill’s Paper Captain skills in IPL 2025 – [ Rohitjuglan ] https://t.co/MZ6BUdOu2e pic.twitter.com/rvOQ0HRKxh
— 𝐑𝐢𝐬𝐡𝐚𝐛𝐡𝐢𝐚𝐧™ (@Rishabhian_17) May 11, 2025
/h3>
முன்னதாக, செய்தி நிறுவனமான PTI வெளியிட்ட தகவலின்படி, டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் வாரிசாக சுப்மன் கில் அறிவிக்கப்படலாம். அதன் தொடர்ச்சியாக, ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம். சுப்மன் கில் ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபியின்போது இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.