Virat Kohli Salary: விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும் விராட் கோலி.. ஒருநாள் சம்பளம் இவ்வளவா?
Vijay Hazare Trophy 2025-26: விஜய் ஹசாரே டிராபியின் லீக் ஸ்டேஜில் டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த எல்லா போட்டிகளிலும் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடுவாரா என்பது தெரியவில்லை. கிடைத்த தகவல்களின்படி, விராட் கோலி 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி
இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் பிறகு, விஜய் ஹசாரே டிராபி (Vijay Hazare Trophy 2025-26) வருகின்ற 2025 டிசம்பர் 24ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி (Virat Kohli) விளையாட ஒப்புக்கொண்டார். கடைசியாக 2009-2010 சீசனில் விராட் கோலி விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார். இப்போது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, விராட் கோலி இந்த உள்நாட்டு போட்டியில் விளையாடுவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி விஜய் ஹசாரே டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடுவார் என்பதால், இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு அவருக்கு ஒரு போட்டிக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: 53வது ஒருநாள் சதம்.. 84வது சர்வதேச சதம்.. மிரட்டும் விராட் கோலி..!
விராட் கோலி ஒரு போட்டிக்கு எவ்வளவு சம்பளம்?
Virat Kohli 🤝 Rishabh pant
The duo will be playing for Delhi in the Vijay Hazare Trophy. 🏆🏏#indvssa #viratkohli #rohitsharma #shubmangill #bharatarmy #COTI 🇮🇳 #rishabhpant #jaspritbumrah #dhoni pic.twitter.com/m66nqF4gIw
— The Bharat Army (@thebharatarmy) December 4, 2025
இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் விதிகளின்படி, கிரிக்கெட் வீரர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரு வீரருக்கு 20 அல்லது அதற்கும் குறைவான லிஸ்ட் ஏ போட்டி அனுபவம் இருந்தால், அவருக்கு ஒரு போட்டிக்கு ரூ. 40,000 கிடைக்கும். 21-40 போட்டி அனுபவம் உள்ள ஒரு வீரருக்கு விஜய் ஹசாரே டிராபியில் ஒரு போட்டிக்கு ரூ. 50,000 கிடைக்கும். அதேநேரத்தில், 41 அல்லது அதற்கு மேற்பட்ட லிஸ்ட் ஏ போட்டி அனுபவம் உள்ள ஒரு வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ. 60,000 வழங்கப்படும். அதன்படி, விராட் கோலிக்கு 300 லிஸ்ட் ஏ போட்டி அனுபவம் இருப்பதால், விஜய் ஹசாரே டிராபியில் டெல்லிக்காக ஒரு போட்டிக்கு ரூ. 60,000 கிடைக்கும்.
விராட் கோலி எத்தனை போட்டிகளில் விளையாடுவார்?
விஜய் ஹசாரே டிராபியின் லீக் ஸ்டேஜில் டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த எல்லா போட்டிகளிலும் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடுவாரா என்பது தெரியவில்லை. கிடைத்த தகவல்களின்படி, விராட் கோலி 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற 2025 டிசம்பர் 24ம் தேதி ஆந்திராவுக்கு எதிராகவும், 2025 டிசம்பர் 26ம் தேதி குஜராத்துக்கும், வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி ரயில்வேஸுக்கும் எதிராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: 2462 நாட்களுக்கு பிறகு.. இந்திய அணிக்கு வெற்றியை தராத கோலியின் சதம்.. ரசிகர்கள் ஏமாற்றம்!
விஜய் ஹசாரே டிராபியில் டெல்லி அணியின் அட்டவணை:
2025-26 விஜய் ஹசாரே டிராபியில் டெல்லி அணி குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் ஹரியானா, குஜராத், சவுராஷ்டிரா, சர்வீசஸ், ஒடிசா, ரயில்வேஸ் மற்றும் ஆந்திரா ஆகிய அணிகளும் உள்ளன. டெல்லி அணி நாக் அவுட் போட்டிகளுக்கு தகுதி பெற்றால் 2026 ஜனவரி 12ம் தேதி முதல் பங்கேற்கும். விராட் கோலி தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நடந்து வரும் ஒருநாள் தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி சதம் அடித்துள்ளார். இதனால், விராட் கோலியின் சிறந்த ஃபார்மும் அவரது அனுபவமும் டெல்லிக்கு பயனுள்ளதாக இருக்கும்.