IndWvsSLW: பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை மகளிரணி – இந்திய மகளிரணி அபார வெற்றி

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும், இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியும் மோதும் முதல் டி20 போட்டி டிசம்பர் 21, 2025 அன்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கை அணையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

IndWvsSLW:  பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை மகளிரணி -  இந்திய மகளிரணி அபார வெற்றி

இந்திய மகளிரணி அபார வெற்றி

Updated On: 

21 Dec 2025 22:50 PM

 IST

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும், இலங்கை (Srilanka) பெண்கள் கிரிக்கெட் அணியும் மோதும் முதல் டி20 போட்டி டிசம்பர் 21, 2025 அன்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கை அணையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்து. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை பெண்கள் அணி பேட்டிங்கில் தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை குணரத்னே 39 ரன்கள் குவித்து அணியின் அதிகபட்ச ஸ்கோரராக இருந்தார்.

பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை

இலங்கை அணியின் கேப்டன் சாமரி அத்தப்பத்து 15 ரன்களும், ஹசினி பெரேரா 20 ரன்களும், ஹர்ஷிதா 21 ரன்களும் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இலங்கை அணியின் இன்னிங்ஸ் ஆரம்பமே அதிர்ச்சியுடன் தொடங்கியது. போட்டியின் 2.5வது பந்தில் கேப்டன் சாமரி அட்டபட்டு, கிராந்தி கவுட் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து குணரத்னே மற்றும் ஹசினி பெரேரா இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : Vijay Hazare Trophy: விஜய் ஹசாரா டிராபியில் களமிறங்கும் கிங்.. டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலி!

மேலும், 10வது ஓவரில் அணியின் ஸ்கோர் 49 ரன்களாக இருந்தபோது,  அந்த ஓவரின் முதல் பந்தில் தீப்தி ஷர்மா வீசிய பந்தை ஹசினி பெரேரா பெரிய ஷாட்டுக்கு முயற்சி செய்து, கிராந்தி கவுடிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ஹர்ஷிதாவும் நீண்ட நேரம் நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தாலும், மறுபுறம் குணரத்னே பொறுமையாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் 18வது ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்க  முயற்சி செய்து,  ரன் அவுட் ஆகி வெளியேறினார்.  இதனால் இலங்கை பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 121 ரன்கள் என்ற சாதாரண இலக்கை மட்டுமே நிர்ணயிக்க முடிந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் கிராந்தி கவுட், தீப்தி ஷர்மா மற்றும் ஸ்ரீசரணி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையும் படிக்க : Year Ender 2025: 2025ம் ஆண்டில் அடித்த லக்.. சாம்பியன் பட்டத்தை குவித்த இந்திய அணியினர்!

இந்தியா அபார வெற்றி

இந்த நிலையில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஸ்மிரிதி மந்தனா சிறப்பான துவக்கம் தந்தார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரிகள் அடித்து 25 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து வந்த ஜெமிமா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருடன் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

44 பந்துகளை எதிர்கொண்ட ஜெமிமா 10 பவுண்டரிகளுடன் 69 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இதனால் 14.4 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 122 ரன்கள் குவித்தது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை