Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கிரிக்கெட் வீரர் சஞ்சுவின் ரூ.6 கோடி பிரம்மாண்ட பங்களா…அசர வைக்கும் அம்சங்கள்!

Cricketer Sanju Samson Huge Bungalow: கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் ரூ. 6 கோடி மதிப்பிலான பங்களா கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த பங்களாவில் பல்வேறு அசர வைக்கும் அம்சங்கள் உள்ளன. மேலும், அவரிடம் விலை உயர்ந்த கார்கள் உள்ளன.

கிரிக்கெட் வீரர் சஞ்சுவின் ரூ.6 கோடி பிரம்மாண்ட பங்களா…அசர வைக்கும் அம்சங்கள்!
Cricketer Sanju Samson Huge Bungalow
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 20 Dec 2025 13:03 PM IST

கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன் மற்றும் அவரது மனைவி சாருலதா ரமேஷ் ஆகியோர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய பங்களாவில் வசித்து வருகின்றனர். சஞ்சு சாம்சன் கடந்த 2018- ஆம் ஆண்டு சாருலதாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், ரூ. 6 கோடி மதிப்பிலான இந்த பங்களாவை வாங்கியிருந்தார். இந்த பங்களாவில் நவீன வடிவமைப்பு, பாரம்பரிய கேரளா கட்டிடக்கலைக்கு நுட்பமான அலங்காரம், பரந்து விரிந்த பால் கனிகள், குடும்பத்தினர் ஒன்றாக இருப்பதற்கும், கிரிக்கெட் வீரர்கள் இரவு நேர உணவுகளை அருந்துவதற்கும் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பாக அவரது வீட்டில் உள்ள திறந்த வெளி ஒரு விரிவான ஓணம் மலர் மற்றும் இதழ் ரங்கோலியை இடமளிக்கும் அளவுக்கு பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கிரிக்கெட் வாழ்க்கை அவரை பெரிய இடத்தில் வைத்திருந்தாலும், அவர் தனது கலாச்சார அடையாளத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறார் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

சாம்சனின் ரியல் எஸ்டேட் போர்ட் போலியோ

இந்த பங்களாவில், போதிய வாகன நிறுத்தும் இடம், பெரிய அளவிலான உள் புறங்கள் உள்ளிட்டவை பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த பங்களா மட்டுமின்றி சாம்சன் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைதியாக ரியல் எஸ்டேட் போர்ட்போலியோவை உருவாக்கியுள்ளார். இதே போல, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய மாநிலங்களில் அவருக்கு சொத்துகள் உள்ளன. இவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் முக்கியமானதாக உள்ளது.

மேலும் படிக்க: பழைய வாகனங்களுக்கு E20 பெட்ரோல் பாதுகாப்பானதா? – கமல்ஹாசனின் கேள்விக்கு நிதின் கட்காரி விளக்கம்

சாம்சனின் LEXUS ES 300H- என்ற பிரம்மாண்ட கார்

சாம்சனிடம் இருக்கும் சொத்துகள் பெரிதாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை. அதே நேரத்தில் அவற்றைப்பற்றி அடிக்கடி பேசுவதும் இல்லை. இதுவே, சாம்சனின் செல்வத்தை குவிக்கும் ஒரு முக்கிய உத்தியாக பார்க்கப்படுகிறது. மேலும், இவருக்கு LEXUS ES 300H- என்ற பிரம்மாண்டமான சொகுசு கார் ஒன்று உள்ளது. இது 2,487 சிசி பெட்ரோல் என்ஜின் மற்றும் தானியங்கி கியர் கொண்ட கார் ஆகும்.

 

View this post on Instagram

 

A post shared by Sanju V Samson (@imsanjusamson)

சாம்சனின் கேரேஜில் உள்ள கார்கள்

இந்த கார்களுக்கான விலை ரூ. 56 லட்சத்தில் தொடங்கும் நிலையில், இந்த காரணத்தை மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. இதை தவிர்த்து சஞ்சு சாம்சனின் கேரேஜில் ரூ.1.64 கோடி முதல் ரூ. 1.84 கோடி வரை மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், சுமார் ரூ.52 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ரூ.65 லட்சம் மதிப்பிலான ஆடி ஏ6 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ED Raid : ஒரே நாளில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!