India vs Pakistan, Asian Games Final Live : தங்கம் யாருக்கு? இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
IND vs PAK Asian Games Final Live Score Updates in Tamil : 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. தங்கப் பதக்கத்திற்கான இந்த விறுவிறுப்பான போட்டி இன்று நடைபெற உள்ளது. எந்த அணி வெற்றி பெற்று தங்கம் வெல்லும் என பார்க்கலாம்
LIVE NEWS & UPDATES
-
கை குலுக்கல் இல்லை
இந்தப் போட்டிக்கு முன்னால் இருந்த மிகப்பெரிய கேள்விக்குறி, இரு அணிகளுகும் போட்டிக்கு இடையே கை குலுக்கி கொள்வார்கள். கடந்த 383 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
-
யாருக்கு சாதகம்?
அரையிறுதிப் போட்டியில் இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசத்தை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இத்தொடரில் இதுவரை இரு அணிகளும் தோல்வியடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.
-
இந்திய அணி ஆதிக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற கடந்த ஆறு டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 2022 ஆசியக் கோப்பையில் இந்தியாவைத் தோற்கடித்தது.
-
போட்டி மழையால் கைவிடப்பட்டால் யாருக்குத் தங்கப் பதக்கம்?
இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் மீண்டும் போட்டி நடைபெறும் ரிசர்வ் டே எதுவும் ஒதுக்கப்படவில்லை.தற்போது வெளியான தகவல்களின்படி, மழையின் காரணமாக இறுதிப் போட்டி கைவிடப்பட்டால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் கூட்டாகத் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
-
இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போது?
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி அக்டோபர் 3, 2026 இன்று இந்திய நேரப்படி காலை 10 மணியளவில் போட்டி தொடங்கவுள்ளது
ஜப்பானின் ஐச்சி நகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதால், அவற்றுக்கிடையேயான தங்கப் பதக்கப் போட்டியின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games) தங்கப் பதக்கப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இதற்கு முன்பு தங்கப் பதக்கப் போட்டிக்கு முன்னேறியதில்லை. இந்த முறை, அவர்கள் முதல் முறையாக தங்கப் பதக்கப் போட்டியில் விளையாட உள்ளனர்.
Published On - Oct 03,2026 8:00 AM