T20 World Cup 2026: நாளை முதல் டி20 உலகக் கோப்பை.. இந்திய அணியின் முதல் போட்டி எப்போது?
India's T20 World Cup Schedule: சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையில் நுழைகிறது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி ஒரு தொடரையும் இழந்தது கிடையாது. பலம் மிக்க இந்திய அணியில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா மற்றும் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.

இந்தியா Vs அமெரிக்கா
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 World Cup) இல் இந்திய கிரிக்கெட் அணி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டி நாளை அதாவது 2026 பிப்ரவரி 7 ம் தேதி தொடங்கும் நிலையில், நடப்பு சாம்பியன்களாக இந்திய அணி, மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் என்று உலக கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) சாம்பியன் பட்டத்தை வென்றது. இருப்பினும், இந்தப் போட்டியின் வரலாற்றில், இதுவரை எந்த அணியும் தொடர்ச்சியாக 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் 20 அணிகள்.. இதில் இத்தனை இந்திய கேப்டன்களா..?
இந்திய அணியின் முதல் போட்டி எப்போது..?
இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும் உள்ளன. இந்தியாவின் முதல் போட்டி நாளை அதாவது 2026 பிப்ரவரி 7ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இதன் பின்னர், இந்திய அணி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி அருண் ஜெட்லி மைதானத்தில் நமீபியாவை எதிர்கொள்ளும். இதனை தொடர்ந்து, மிகப்பெரிய எதிர்பாப்புக்கு மத்தியில் இந்தியாவும் பாகிஸ்தானும் வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இதற்கு அடுத்த கட்டமாக, இந்தியாவும் நெதர்லாந்தும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. 2026 டி20 உலகக் கோப்பையில் 4 குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் லீக் ஸ்டேஜ் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8-க்கு முன்னேறும்.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி நம்பர் 1:
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையில் நுழைகிறது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி ஒரு தொடரையும் இழந்தது கிடையாது. பலம் மிக்க இந்திய அணியில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா மற்றும் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் உள்ளனர். இதுமட்டுமின்றி, 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற எட்டு வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 7 புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: டி20 உலகக் கோப்பையில் இதுவரை.. படைக்கப்பட்ட முக்கிய சாதனைகள் விவரம்!
2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா , ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வாஷிங்டன் சுந்தர்.