Smriti Mandhana: கடைசி போட்டியில் 62 ரன்கள் மட்டுமே தேவை.. கில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!

Smriti Mandhana To Break shubman Gill Record: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 2025ம் ஆண்டில் 35 சர்வதேச போட்டிகளில் 42 இன்னிங்ஸ்களில் 7 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் உள்பட 1764 ரன்கள் குவித்தார். இருப்பினும், இந்த ஆண்டின் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா இப்போது அவரை முறியடிக்க முடியும்.

Smriti Mandhana: கடைசி போட்டியில் 62 ரன்கள் மட்டுமே தேவை.. கில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!

சுப்மன் கில் - ஸ்மிருதி மந்தனா

Published: 

30 Dec 2025 12:09 PM

 IST

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் (Indian Womens Cricket Team) நட்சத்திர தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana), 2025ம் ஆண்டில் தனது பெயரில் பல்வேறு சாதனைகளை குவித்து வருகிறார். தொடர்ந்து பேட்டிங்கில் ரன்கள் எடுத்து வரும் ஸ்மிருதி மந்தனா, இப்போது மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டுவதற்கு மிக அருகில் உள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் நான்காவது போட்டியில், மந்தனா 80 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இப்போது, ​​இந்த 2025ம் ஆண்டின் இறுதிக்குள் சுப்மன் கில்லை முந்தி வரலாறு படைக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு ஸ்மிருதி மந்தனாவுக்கு கிடைத்துள்ளது.

ALSO READ: குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள்.. டி20யில் அதிக சிக்ஸர்கள்.. மிரட்டும் ஸ்மிருதி மந்தனா!

2025ம் ஆண்டில் ஒரு சிறப்பு சாதனை படைப்பாரா ஸ்மிருதி மந்தனா..?

2025ம் ஆண்டில் 3 வடிவங்களிலும் சேர்த்து ஸ்மிருதி மந்தனா மொத்தம் 1,703 சர்வதேச ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலண்டர் ஆண்டில் மகளிர் கிரிக்கெட்டில் எந்தவொரு வீராங்கனையும் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். குறிப்பிடத்தக்க வகையில், ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையையும் ஸ்மிருதி மந்தனா படைக்க முடியும். இதை அடைய ஸ்மிருதி மந்தனாவுக்கு 62 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. தற்போது, ​​இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் சுப்மன் கில் 2025 ஆம் ஆண்டில் 1,764 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறார்.

இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் வாய்ப்பு:


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அதாவது 2025 டிசம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய அணி ஏற்கனவே தொடரில் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது. கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா 62 ரன்கள் எடுத்தால், 2025ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார். இந்த சாதனை மகளிர் கிரிக்கெட்டுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும்.

ஒருநாள் போட்டிகளில் கலக்கிய ஸ்மிருதி மந்தனா:

2025ம் ஆண்டில் ஸ்மிருதி மந்தனாவின் ஒருநாள் போட்டி செயல்திறன் விதிவிலக்கானது. இந்த 2025ம் ஆண்டு 23 ஒருநாள் போட்டிகளில் 110 ஸ்ட்ரைக் ரேட்டில் 5 சதங்கள் மற்றும் 5 அரை சதங்களுடன் 1362 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 2025 உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா பொறுப்பேற்று அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கியதே அவரது மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது.

ஸ்மிருதி மந்தனா 2025ம் ஆண்டில் இதுவரை 9 டி20 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 341 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி பெரிய ஷாட்களை அடிக்கும் ஸ்மிருதி மந்தனாவின் திறமை பல போட்டிகளில் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.

ALSO READ: இந்தியா – இலங்கை இடையிலான 5வது டி20.. முழுமையான வெற்றியை பதிவு செய்யுமா ஹர்மன்ப்ரீத் படை?

சுப்மன் கில்லுக்கும் சிறப்பு ஆண்டு:

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 2025ம் ஆண்டில் 35 சர்வதேச போட்டிகளில் 42 இன்னிங்ஸ்களில் 7 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் உள்பட 1764 ரன்கள் குவித்தார். இருப்பினும், இந்த ஆண்டின் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா இப்போது அவரை முறியடிக்க முடியும்.

Related Stories
IND W vs SL W 5th T20: இந்தியா – இலங்கை இடையிலான 5வது டி20.. முழுமையான வெற்றியை பதிவு செய்யுமா ஹர்மன்ப்ரீத் படை?
Year Ender 2025: 2025ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த ஸ்கோர்.. டாப் 2வில் இந்திய அணி!
Smriti Mandhana Records: குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள்.. டி20யில் அதிக சிக்ஸர்கள்.. மிரட்டும் ஸ்மிருதி மந்தனா!
Indian Head Coach: கவுதம் கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணன்.. டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளர்? பிசிசிஐ அப்டேட்!
IND vs NZ ODI Series: நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி எப்போது அறிவிக்கப்படும்? கிடைத்த முக்கிய அப்டேட்!
IND vs NZ ODI: ஒருநாள் தொடருக்கான இந்திய அணி.. 3 முக்கிய வீரர்கள் நீக்கப்பட வாய்ப்பு.. பிசிசிஐ பிளான் என்ன?
இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு