IND vs WI: டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங் தேர்வு.. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துமா?

T20 World Cup 2026: இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்திய மண்ணில் விளையாடிய டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த போதெல்லாம் தோல்வியை சந்தித்துள்ளது. அவற்றில், 2 போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்றன.

IND vs WI: டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங் தேர்வு.. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துமா?

இந்திய கிரிக்கெட் அணி

Updated On: 

01 Mar 2026 19:57 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (IND vs WI) அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதியை உறுதி செய்யும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸைத் தொடர்ந்து, இரு அணிகளும் தங்கள் விளையாடும் பதினொன்றை அறிவித்தன. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது விளையாடும் பிளேயிங் லெவன் அணியில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. அதேநேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் அணியில் ஒரே ஒரு மாற்றத்தை அறிவித்தார்.

ALSO READ: இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற.. எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்?

வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த வீரருக்கு வாய்ப்பு..?

டாஸ் வென்ற பிறகு, தங்களது அணியில் எந்த மாற்றங்களையும் செய்ய விரும்பவில்லை என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார். இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங்கிற்கு பதிலாக அகில் உசேன் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிராண்டன் கிங் அணியில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக, அகில் உசேனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தோல்வி உறுதியா?

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்திய மண்ணில் விளையாடிய டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த போதெல்லாம் தோல்வியை சந்தித்துள்ளது. அவற்றில், 2 போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்றன. 2026 டி20 உலகக் கோப்பையின் போது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் இந்திய அணி விளையாடுவது இதுவே முதல் முறை. வெஸ்ட் இண்டீஸ் அணிகளை பொறுத்தவரை, நடப்பு உலகக் கோப்பையில் ஈடன் கார்டன்ஸில் இது அவர்களின் நான்காவது போட்டியாகும். வெஸ்ட் இண்டீஸ் இந்த மைதானத்தில் முந்தைய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் நேருக்கு நேர்.. யார் இதுவரை ஆதிக்கம்?

விளையாடும் இரு அணிகளின் விவரம்:

இந்தியா:

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி

வெஸ்ட் இண்டீஸ்:

ஷாய் ஹோப் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மியர், ரோவ்மன் பவல், ரோஸ்டன் சேஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜேசன் ஹோல்டர், மேத்யூ ஃபோர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோதி, ஷமர் ஜோசப், அகீல் ஹொசைன்

 

Follow Us
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ
லாபத்தின் 70% போனஸாக வழங்கிய சீன நிறுவனம்.. இணையத்தில் வைரல்..
கனவில் துரத்தும் மர்ம நபர்… ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘சீக்ரெட் ஸ்டோரீஸ்
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்