IND vs WI 1st Test: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டை எப்போது, எங்கே பார்க்கலாம்? முழு விவரம் இதோ!
IND vs WI 1st Test Live Streaming: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 2025 அக்டோபர் 2ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு இது ஒரு முக்கியமான போட்டியாக இருக்கும்.

ஆசியக் கோப்பை முடிந்த சில நாட்கள் ஆன நிலையிலும், அதனை பற்றிய சர்ச்சைகள் இன்னும் முடிவடையவில்லை. அதேநேரத்தில், இன்று அதாவது 2025 அக்டோபர் 2ம் தேதி தொடங்கும் 2 டெஸ்ட் தொடர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி அடுத்த சவால் விட தயாராக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 2025 அக்டோபர் 2ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு இது ஒரு முக்கியமான போட்டியாக இருக்கும். இந்தநிலையில், இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை எப்போது, எந்த நேரத்தில், எந்த சேனலில் பார்க்கலாம் என்பதை இங்கே காணலாம்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இந்திய மண்ணில் இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில் 13 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 14 முறை வெற்றி பெற்றுள்ளது. 20 போட்டிகள் டிராவில் முடிந்தன. மேலும், 1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை தோற்கடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேரடி ஒளிபரப்பு மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங்கை எப்போது, எங்கே பார்ப்பது?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.




நேரடி ஒளிபரப்பானது இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் வலைத்தளத்தில் கிடைக்கும். நேரடி ஒளிபரப்பும் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்குத் தொடங்கும். டாஸ் அரை மணி நேரத்திற்கு முன்னதாக இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெறும்.
இரு அணிகளின் முழு அணி விவரம்
இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா , அக்சர், மொஹம் கிருஷ்ணா, நிதீஷ் படேல், மொஹம் கிருஷ்ணா ரெட்டி. என் ஜெகதீசன்
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிக்கன் (துணை கேப்டன்), கெவலன் ஆண்டர்சன், அலிக் அதனேஸ், ஜான் கேம்பல், டெக்னாரின் சந்தர்பால், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப், டெவின் இம்லாக், ஜாடியா பிளேட்ஸ், ஜோஹன் லைன், பிராண்டன் கிங், ஆண்டர்சன் பிலிப், காரி பியர், ஜெய்டன் சீல்ஸ்.