IND vs NZ 2nd ODI: ROKO தோல்வி! மீட்டெடுத்த கே.எல்.ராகுல்.. நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு!
IND vs NZ 2nd ODI Highlights: முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் 25 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். ஆனால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் தனது எட்டாவது ஒருநாள் சதத்துடன் இந்திய அணியை மீட்டெடுத்தார்.

கே.எல்.ராகுல் - சுப்மன் கில்
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு (India – New zealand ODI Series) இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் (Virat Kohli) 25 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். ஆனால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் தனது எட்டாவது ஒருநாள் சதத்துடன் இந்திய அணியை மீட்டெடுத்தார். அதேநேரத்தில், கேப்டன் சுப்மன் கில் தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி:
Calm and Composed Centurion 💯
When the going gets tough, the tough gets going 😎
Scorecard ▶️ https://t.co/x1fEenI0xl#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank | @klrahul pic.twitter.com/vBEcwq73fb
— BCCI (@BCCI) January 14, 2026
நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி 70 ரன்கள் எடுத்து ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதற்கிடையில், தொடர்ச்சியாக ஐந்து ஒருநாள் இன்னிங்ஸ்களில் அரைசதம் அல்லது அதற்கு மேல் அடித்த விராட் கோலி, ராஜ்கோட்டில் வெறும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முதல் ஒருநாள் போட்டியில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்த சுப்மன் கில் இந்த முறையும் 56 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் அரைசதத்தை தவறவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர் இந்த முறை சிறப்பாக செயல்படத் தவறி, வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
கே.எல். ராகுலின் 8வது சதம்
22வது ஓவரில் கே.எல். ராகுல் பேட்டிங் செய்ய உள்ளே வந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் விக்கெட்டுகள் சீராகச் சரிந்து கொண்டிருந்தன. ஆனால், மறுபுறம் கே.எல். ராகுல் உறுதியாக நின்று 92 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் தனது எட்டாவது ஒருநாள் சதத்தை கே.எல்.ராகுல் பதிவு செய்தார். அதேநேரத்தில், ரவீந்திர ஜடேஜா 27 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 20 ரன்களும் எடுத்தனர்.
ALSO READ: 4 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம்.. ஒருநாள் தரவரிசையில் ’கிங்’ கோலி டாப்..!
முதல் 30 ஓவர்களில் இந்திய அணி 142 ரன்கள் எடுத்தது. இந்த ஓவர்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் ரன் விகிதம் கணிசமாகக் குறைந்திருந்தது. ஆனால் கே.எல். ராகுல் ஒரு முனையை ஒன்றாகப் பிடித்தது மட்டுமல்லாமல் விரைவாகவும் ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக, இந்திய அணி கடைசி 20 ஓவர்களில் இந்திய அணி 142 ரன்கள் சேர்த்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ்டியன் கிளார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.