AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jasprit Bumrah Fitness: மனைவி சஞ்சனா கேட்ட ஒரு கேள்வி.. பதிலளிக்க மறுத்த பும்ரா! ட்ரெண்டாகும் வீடியோ..!

IND vs ENG Test Series 2025: லீட்ஸ் டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சஞ்சனா கணேசன் அவரது உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பிய நேர்காணல் வைரலாகியுள்ளது. பும்ரா தனது உடல்நிலை சிறப்பாக இருப்பதாகவும், 5 டெஸ்ட் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டேன் என முன்னரே தெரிவித்ததையும் பகிர்ந்துகொண்டார். SENA நாடுகளில் 150 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார்.

Jasprit Bumrah Fitness: மனைவி சஞ்சனா கேட்ட ஒரு கேள்வி.. பதிலளிக்க மறுத்த பும்ரா! ட்ரெண்டாகும் வீடியோ..!
சஞ்சனா கணேஷ் - ஜஸ்பிரித் பும்ராImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jun 2025 08:18 AM IST

இந்தியா – இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் (IND vs ENG Test Series 2025) கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது , லீட்ஸில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இதுவரை, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தநிலையில், லீட்ஸ் டெஸ்டின் நான்காவது நாளுக்கு முன்பு தனது மனைவியும் விளையாட்டு தொகுப்பாளினியுமான சஞ்சனா கணேசனுக்கு (Sanjana Ganesan) ஒரு சிறப்பு நேர்காணல் ஒன்றில் பும்ரா பேசினார். அப்போது, சஞ்சனா, பும்ராவிடம் அவரது உடற்தகுதி மற்றும் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பினார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பும்ராவிடம் என்ன கேள்வி எழுப்பினார் சஞ்சனா..?

லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும், பும்ரா குறைந்த எகானமியில் பந்துவீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதாவது முதல் இன்னிங்ஸில் பும்ரா 24.4 ஓவர்கள் பந்துவீசி 83 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காயங்களுடன் போராடி வரும் பும்ராவின் உடற்தகுதி எப்போதும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. நேர்காணலின் தொடக்கத்தில் சஞ்சனா அவரிடம் அவரது உடல் நிலை குறித்து கேட்டதற்கு இதுவே காரணம். சஞ்சனா நேர்காணலில் பும்ராவிடம், “ ஜஸ்பிரித், இந்த டெஸ்ட் போட்டியில் உங்கள் உடல் எப்படி உள்ளது..? என்று கேட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பும்ரா சிரித்துக்கொண்டே, ‘எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் முற்றிலும் உடற்தகுதியுடன் இருக்கிறேன், பந்துவீச்சை ரசிக்கிறேன்’ என்றார்.

பும்ராவிடம் நேர்க்காணல்:

தொடர்ந்து, சஞ்சனா பும்ராவிடம், ”இந்தத் தொடரில் உள்ள 5 போட்டிகளிலும் நீங்கள் விளையாட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார். இதற்கு பும்ரா பதில் எதுவும் அளிக்கவில்லை. முன்னதாக, பணிச்சுமையை மனதில் கொண்டு, தொடரின் 5 போட்டிகளிலும் தான் பங்கேற்க மாட்டேன் என்று பும்ரா இந்தத் தொடருக்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளார்.

கலக்கும் பும்ரா:

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா மொத்தம் 24.4 ஓவர்கள் பந்து வீசி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில், ஜாக் க்ரௌலி, பென் டக்கெட், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஷ் டோங் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட் செய்தார். இதன் மூலம், அவர் SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) நாடுகளில் 150 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.

Follow Us