AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிஎஸ்கே செய்ய வேண்டிய 3 மாற்றங்கள்.. பிளே ஆஃப் செல்ல இதுதான் ஒரே வழி!

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது பந்துவீச்சில் சில மாற்றங்கள் செய்வது முக்கியம். ஏனெனில், பந்துவீச்சாளர்கள் பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் சுமாரான செயல்திறனையே வெளிப்படுத்தியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை அடைந்த 3 தோல்விகளிலும் இந்த காரணங்களே வெளிப்பட்டுள்ளது.

IPL 2026: சிஎஸ்கே செய்ய வேண்டிய 3 மாற்றங்கள்.. பிளே ஆஃப் செல்ல இதுதான் ஒரே வழி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Apr 2026 18:17 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியைச் சந்தித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்தது. பின்னர், சொந்த ஸ்டேடியமான சென்னை சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியைச் சந்தித்தனர். இதன் தொடர்ச்சியாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடன் படுதோல்வி அடைந்தது. எனவே, ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் பிளேஆஃப் சுற்றுக்கான சென்னையின் பயணம் மேலும் கடினமாகப் போகிறது. ஆகையால், லீக்கின் மீதமுள்ள 11 போட்டிகளிலும் சிஎஸ்கே (CSK) சிறப்பாகச் செயல்பட வேண்டும். ஆனால், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என இரண்டு கேள்விகள் எழுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற 3 மாற்றங்கள் தேவை. இந்த மாற்றங்கள் செய்யப்பட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயணம் வெற்றிப் பாதையில் செல்லும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ALSO READ: ரிஷப் பண்ட் நிதான அரைசதம்.. லக்னோவின் வெற்றிக்காக நடராஜன் ஷாட்!

பந்துவீச்சின் பலவீனங்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது பந்துவீச்சில் சில மாற்றங்கள் செய்வது முக்கியம். ஏனெனில், பந்துவீச்சாளர்கள் பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் சுமாரான செயல்திறனையே வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை அடைந்த 3 தோல்விகளிலும் இந்த அம்சம் வெளிப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அகில் ஹொசைனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்த 3 போட்டிகளிலும் அகில் ஹொசைனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அகில் டி20 கிரிக்கெட்டில் 273 போட்டிகளில் விளையாடி 254 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாம, அவரது எகானமி ரேட் 7.1 ஆகுவும் உள்ளது.

மிடில் ஆர்டரில் மாற்றம் தேவை:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது மிடில் ஆர்டரில் மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. இந்த வரிசையில் கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் உள்பட 2 வீரர்கள் ஐபிஎல் சீசனில் முதல் முறையாக விளையாடுகிறார்கள். கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோரை சென்னை அணி 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் அதே வேளையில், மிடில் ஆர்டரில் டிவால்ட் பிரேவிஸையும் கருத்தில் கொள்வது அவசியம். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு டிவால்ட் பிரேவிஸ் உடற்தகுதியுடன் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவர் ஆடும் லெவனில் இடம்பெற்றால், அணியின் பலம் அதிகரிக்கும்.

ALSO READ: ஸ்டீபன் ஃபிளெமிங்கை விமர்சிக்கும் ரசிகர்கள்.. சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணம் யார்?

தோனி மீண்டும் விளையாடுவாரா?

காயம் காரணமாக மகேந்திர சிங் தோனி தொடக்கப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது இந்த விலகல் அனுபவமின்மையால்தான் நிகழ்ந்துள்ளது. 3 தோல்விகளுக்குப் பிறகு இது தெளிவாகியுள்ளது. ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது முடிவெடுக்கும் திறனில் சில குறைபாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். தோனி விக்கெட்டுக்குப் பின்னால் இருந்து பந்துவீச்சாளர்களுக்கு வழிகாட்டுகிறார். இது பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் உதவுகிறது.

Follow Us