AUS vs ENG 4th Test: 14 ஆண்டுகள் காத்திருப்பு.. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
England Cricket Team: மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்த சுமார் 10 மில்லிமீட்டர் புல்வெளி பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுத்தது. இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என அனைவரும் நினைத்தனர். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் வெறும் 152 ரன்களுக்கு மட்டுமே சுருண்டது.

ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து 4வது டெஸ்ட்
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (AUS vs ENG) இடையிலான 2025-26 ஆஷஸ் தொடரின் 4வது போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முழுக்க முழுக்க பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெறும் 2 நாட்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இங்கிலாந்து (England Cricket Team) தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது மட்டுமின்றி, 14 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற போதிலும் ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும், ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரை என்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: முக்கிய வீரர்களுக்கு ஓய்வு.. இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து இளம் அணி களம்!
கலக்கிய இங்கிலாந்து அணி:
Boxing Day Test between Aus vs Eng.Two teams combined to play 144 overs, one and a half days of play. Imagine if a Test match in India ended so quickly,the pitch would be declared poor.But this test match will get the status of a classic test match. Hypocrisy #AUSvsENG #Ashes2025 pic.twitter.com/nRnZnPpV5L
— Vipul Patel 🇮🇳 (@vipoolpm) December 27, 2025
மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்த சுமார் 10 மில்லிமீட்டர் புல்வெளி பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுத்தது. இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என அனைவரும் நினைத்தனர். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் வெறும் 152 ரன்களுக்கு மட்டுமே சுருண்டது. இதில், ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 35 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், வேறு எந்த பேட்ஸ்மேனும் 30 ரன்களை எட்ட முடியவில்லை. இங்கிலாந்து அணிக்காக ஜோஷ் டோங்கு 5 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இருப்பினும், பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்தின் பேட்டிங் செயல்திறனும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணி வெறும் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் முன்னிலை கிடைத்தது. இங்கிலாந்து அணிக்காக ஹாரி புரூக் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார் . இன்னிங்ஸில் 30 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே பேட்ஸ்மேன் அவர்தான். இதற்கிடையில், ஆஸ்திரேலியா அணிக்காக மைக்கேல் நெசர் 4 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலந்து 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணியின் 14 வருட காத்திருப்பு:
முதல் இன்னிங்சில் 42 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2வது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய 34.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணிக்காக டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணிக்காக பிரைடன் கார்ஸ் அற்புதமாக பந்து வீசி, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரத்தில், கேப்டன் பென் ஸ்டோக்ஸும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ALSO READ: இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? மெக்கலம் நீக்கமா?
175 ரன்கள் இலக்கு:
175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி வலுவான தொடக்கத்தை பெற்றது. முதல் விக்கெட்டுக்கு சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஜோடி 51 ரன்கள் சேர்த்தது . சாக் கிராலி 37 ரன்களும், பென் டக்கெட் 34 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தொடரில் இங்கிலாந்து தொடக்க ஜோடியின் முதல் அரைசத பார்ட்னர்ஷிப் இதுவாகும் . பின்னர் ஜேக்கப் பெத்தேல் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இது 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற உதவியது . இதற்கு முன்பு, இங்கிலாந்து 2011 இல் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மைதானத்தில் தோற்கடித்தது.