Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs NZ: முக்கிய வீரர்களுக்கு ஓய்வு.. இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து இளம் அணி களம்!

IND vs NZ Series: நியூசிலாந்து அணியின் ஒருநாள் கேப்டன் மிட்செல் சாண்ட்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சாண்ட்னர் இல்லாத நிலையில், 3 போட்டிகள் கொண்ட இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

IND vs NZ: முக்கிய வீரர்களுக்கு ஓய்வு.. இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து இளம் அணி களம்!
மைக்கேல் பிரேஸ்வெல்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Dec 2025 23:21 PM IST

வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிரான (IND vs NZ) ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச தொடருக்கான அணிகளை நியூசிலாந்து கிரிக்கெட் இன்று அதாவது 2025 டிசம்பர் 23ம் தேதி அறிவித்தது. நியூசிலாந்து அணியின் ஒருநாள் கேப்டன் மிட்செல் சாண்ட்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சாண்ட்னர் இல்லாத நிலையில், 3 போட்டிகள் கொண்ட இந்திய அணிக்கு (Indian Cricket Team) எதிரான தொடரில் ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் மேட் ஹென்றி, மார்க் சாப்மேன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோருக்கும் ஒருநாள் தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: இந்தியா- நியூசிலாந்து இடையிலான தொடர் எப்போது..? எத்தனை போட்டிகளில் விளையாடுகிறது?

நியூசிலாந்து ஒருநாள் அணி:


மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவன் கான்வே, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), கைல் ஜேமீசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.

நியூசிலாந்து டி20 அணி:

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே (விக்கெட் கீப்பர்), ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமீசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, டிம் ராபின்சன், இஷ் சோதி.

இந்தியா – நியூசிலாந்து இடையிலான தொடர் அட்டவணை:

இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற 2026 ஜனவரி 11ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி வதோதராவில் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி 2026 ஜனவரி 14 ஆம் தேதி ராஜ்கோட்டிலும், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 2026 ஜனவரி 18ம் தேதி இந்தூரில் நடைபெறும்.

ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு மாறும் கேப்டன்சி.. சூர்யாக்கு பதிலாக புதிய கேப்டன் யார்?

டி20 தொடர் அட்டவணை:

இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2026 ஜனவரி 21ம் தேதி தொடங்கும். முதல் போட்டி நாக்பூரில் நடைபெறும். இரண்டாவது டி20 2026 ஜனவரி 23 ஆம் தேதி ராய்ப்பூரிலும், 3வது டி20 2026 ஜனவரி 25ம் தேதி குவாஹாட்டியில் நடைபெறும். இதனை தொடர்ந்து, 4வது டி20 ஜனவரி 28ம் தேதி விசாகப்பட்டினத்திலும், தொடரின் 5வது மற்றும் இறுதிப் போட்டி 2026 ஜனவரி 31ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும். இதன் பிறகு, 2026 டி20 உலகக் கோப்பை 2026 பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும்.