Rayudu on Dhoni’s Anger: என் கோபத்தை இதனுடன் ஒப்பிட்ட தோனி.. அம்பதி ராயுடு சொன்ன ரகசியம்!
MS Dhoni's Temper: அம்பதி ராயுடு, ஜியோஹாட்ஸ்டாரின் 'சீக்கி சிங்கிள்ஸ்' நிகழ்ச்சியில், தோனியின் கோபத்தை "தகரக் கூரை போல விரைவாக வெப்பமடையும்" என்று விவரித்தார். தோனி அவரிடம் பந்து வைட்/நோ-பால் ஆனால் கோபப்பட வேண்டாம் எனவும் சொல்வார் என்றும், ஆனால் அவர் களத்திலேயே கோபப்பட்ட சம்பவங்களையும் ராயுடு பகிர்ந்து கொண்டார்.

எம்.எஸ்.தோனி
கிரிக்கெட்டில் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையையும் அசால்ட்டாக கையாண்டு இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து தந்தவர் எம்.எஸ்.தோனி (MS Dhoni). இதன் காரணமாகவே, இவரை அனைவரும் செல்லமாக கேப்டன் கூல் என்று அழைப்பார்கள். ஆனால், இப்படிப்பட்ட தோனியே பல முறை களத்திலும் சரி, களத்திற்கு வெளியையும் சரி கோபப்பட்டு பார்த்திருப்போம். இந்தநிலையில், முன்னாள் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான அம்பதி ராயுடு (Ambati Rayudu) சமீபத்தில் ஒரு உரையாடலில், மகேந்திர சிங் தோனி தனது கோபத்தை அடிக்கடி தகர கூரையுடன் ஒப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
ALSO READ: மிஸ்ஸான ரஜத் படிதார் போன் நம்பர்.. கோலி, டிவில்லியர்ஸிடம் சேட்டை செய்த இளைஞர்கள்!
என்ன சொன்னார் அம்பதி ராயுடு..?
ஜியோஹாட்ஸ்டாரின் ‘சீக்கி சிங்கிள்ஸ்’ நிகழ்ச்சியில் பேசிய அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி குறித்து கூறுகையில், “சில நேரங்களில் எம்.எஸ்.தோனி, என்னிடம் வந்து தகர கூரை விரைவாக வெப்பமடைவது போல, நீங்களும் விரைவாக கோபப்படுகிறீட்கள். பந்து வைட் அல்லது நோ பால் என்று அம்பயர் சொன்னால் கோபம் வேண்டாம். பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்து, உன் கையை உயர்த்தாதே. உன்னால் நான் ஃபேர் பிளே புள்ளிகளை இழக்க விரும்பவில்லை” என்று கூறுவார். வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அதே ஆண்டில் அதே ஆண்டில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோபப்பட்டு களத்தில் இறங்கினார். அதற்கு நான் காரணம் அல்ல, நாங்கள் தோற்க போகிறோம் என்பதற்காக என்றும் ராயுடு தெரிவித்தார்.
சிஎஸ்கே அம்பத்தி ராயுடு:
Ambati Rayudu – 602 runs.
Shane Watson – 555 runs.
MS Dhoni – 455 runs.
Suresh Raina – 445 runs.PEAK BATTING IN IPL 2018 – THE GOLDEN PERIOD OF CSK BATTING 🙇 pic.twitter.com/QZoHg2pGSd
— Johns. (@CricCrazyJohns) May 27, 2025
அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018 முதல் 2021 வரை 61 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஏழு அரைசதங்களுடன் 1,507 ரன்கள் எடுத்தார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
ALSO READ: பந்தய ஆப் விளம்பரம்.. சிக்கலில் சிக்கிய சுரேஷ் ரெய்னா.. அமலாக்கத்துறை சம்மன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவதற்கு முன்பு, ராயுடு இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதாவது, அம்பதி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை அணிக்காக விளையாடினார். இந்த நேரத்தில், ராயுடு மும்பை அணிக்காக 87 போட்டிகளில் விளையாடி 1,771 ரன்கள் எடுத்தார், அதிகபட்சமாக 81 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2013, 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மும்பை அணி கோப்பையை வென்றபோது அம்பதி ராயுடு அணியில் இடம்பெற்றிருந்தார்.