Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Spiritual Tips: கோயிலில் தீபம் ஏற்றும்போது இதெல்லாம் செய்யாதீங்க..

கோயில்களில் விளக்கேற்றும் போது நாம் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். வீட்டு விளக்குகள் மற்றும் கோயில் விளக்குகளில் உள்ள வேறுபாடுகள், எந்த எண்ணெய் பயன்படுத்த வேண்டும், என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும். சரியான வழிபாட்டு முறையைப் பின்பற்றி வழிபட்டால் மன நிறைவான வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம்.

Spiritual Tips: கோயிலில் தீபம் ஏற்றும்போது இதெல்லாம் செய்யாதீங்க..
விளக்கேற்றி வழிபடுதல்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 21 May 2025 12:13 PM

கோயில்கள் தான் இறைவன் குடிகொண்டுள்ள மிகப்பெரிய இடமாக பார்க்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும் இறைவன் இருந்தாலும், கோயில்களில் இருக்ககூடிய சூழலே தனித்துவமானது. இறையருளை கோயிலினுள் நுழையும்போதே நம்மால் உணர முடியும். மன அமைதி வேண்டுவோர் கோயில்களில் பல்வேறு விதமான வழிபாடுகளையும் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் கோயில்களில் பலரும் தீபம் ஏற்றி வழிபடும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அதில் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. காரணம் வீட்டில் தீபமேற்றி வழிபடுவது வேறு, ஆலயத்தில் வழிபடுவது வேறு என்பதை உணர வேண்டும். இத்தகைய தீபமேற்றி வழிபடுவதில் ஒவ்வொரு முறையில் குளறுபடிகள் ஏற்படுகிறது. இது இறை வழிபாட்டில் மட்டுமல்லாது நம்முடைய மனதில் மிகப்பெரிய மனக் கவலையை உண்டாகி விடுகிறது.

கோயில்களில் விளக்கேற்றும் வழிமுறை

இப்படியான நிலையில் கோயில்களில் விளக்கேற்றி வழிபடுவதற்கென தனியிடம் அமைக்கப்பட்டிருக்கும். அதில் ஏற்கனவே பலராலும் பயன்படுத்தப்பட்ட விளக்குகள் இருக்கும். அதன் அருகிலேயே நெய் ஊற்றி விளக்கு விற்பனை செய்பவர்களும் இருப்பார்கள். சிலர் கோயில்கள் ஏற்கனவே மற்றவர்கள் ஏற்றிய விளக்கில் எண்ணெய் மட்டும் ஊற்றி தீபமேற்றி வழிபடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் வீட்டில் ஏற்கனவே பயன்படுத்திய மண் விளக்குகளை கொண்டு செல்வார்கள். இன்னும் சிலர் புதிதாக வாங்கி தீபமேற்றுவது வழக்கமாக இன்றைக்கும் நடைபெற்று வருகிறது.

இவற்றை தவிர்த்துப் பார்த்தால் கோயில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு கடவுள் அருகிலும் பித்தளை விளக்கு, சர விளக்கு, சுவாமிக்கு பின்னால் தூண்டாமணி விளக்கு ஆகியவை ஏற்றப்பட்டிருக்கும்.

தயவு செய்து இதெல்லாம் செய்யாதீங்க

இப்படி கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் விளக்குகளுக்கு நீங்கள் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபமேற்றி வழிபடலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் ஏற்கனவே பயன்படுத்திய விளக்குகளை அவசரத்துக்கு வேண்டுமானால் ஏற்றிக் கொள்ள உபயோகிக்கலாம். ஆனால் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டே செல்பவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து புதிய மண் விளக்குகளை எடுத்துச் செல்லலாம்.

இந்த விளக்குகளுக்கு நல்லெண்ணெய், விளக்கு எண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய் (சில தெய்வங்களுக்கு மட்டும்) பயன்படுத்தலாம். அதேபோல் பசு நெய் உபயோகிக்கலாம். கோயிலின் தீபம் ஏற்றச் செல்லும்போது வீட்டில் இருந்து பழைய துணி எடுத்துச் செல்லுங்கள். பலரும் எண்ணெய் கையை அங்கிருக்கும் சுவற்றில் தேய்த்து அந்த இடத்தை அசுத்தமாக்கி விடுகிறார்கள். நாம் ஏற்றும் தீபம் மூலம் ஒளி வடிவாய் வரும் இறைவனை வழிபட நினைக்கும் நாம் அந்த இடத்தை அசுத்தம் செய்தால் அது எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்கி விடும்.

சிலர் எண்ணெய், திரி போட்டு விட்டு கையில் எண்ணெய் இருந்தால் அதனை தலையில் தடவிக் கொண்டு விளக்கேற்றும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படியெல்லாம் செய்யவே கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்?
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்?...
மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ
மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...
Weak Password-களை இனி கூகுளே மாற்றிவிடும் - எப்படி தெரியுமா?
Weak Password-களை இனி கூகுளே மாற்றிவிடும் - எப்படி தெரியுமா?...
சந்திர மங்கள யோகம்.. இந்த 6 ராசிக்கு செல்வம் பெருகும்
சந்திர மங்கள யோகம்.. இந்த 6 ராசிக்கு செல்வம் பெருகும்...
பாகிஸ்தானுக்கு உளவு பார்ந்த இந்திய பெண் - வாட்ஸ்அப் சாட் வெளியீடு
பாகிஸ்தானுக்கு உளவு பார்ந்த இந்திய பெண் - வாட்ஸ்அப் சாட் வெளியீடு...
அடையாறு ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்! மாற்றாக இலவச வீடு..!
அடையாறு ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்! மாற்றாக இலவச வீடு..!...
தீராத நோயும் தீரும்..ஏரல் சேர்மன் அருணாச்சலம் கோயிலின் சிறப்புகள்
தீராத நோயும் தீரும்..ஏரல் சேர்மன் அருணாச்சலம் கோயிலின் சிறப்புகள்...
பிரபல ஏசி பிராண்டுகளுக்கு ஃபிளிப்கார்ட் வழங்கும் அதிரடி தள்ளுபடி
பிரபல ஏசி பிராண்டுகளுக்கு ஃபிளிப்கார்ட் வழங்கும் அதிரடி தள்ளுபடி...
கிரிக்கெட் போதும்! புது கேமில் கலக்கிய விராட் - அனுஷ்கா!
கிரிக்கெட் போதும்! புது கேமில் கலக்கிய விராட் - அனுஷ்கா!...
பணத்திற்காக பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கிறேனா? விஜய் சேதுபதி
பணத்திற்காக பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கிறேனா? விஜய் சேதுபதி...
விரைவில் PF பணத்தை UPI & ATM மூலம் எடுக்கலாம் - எப்போது முதல்?
விரைவில் PF பணத்தை UPI & ATM மூலம் எடுக்கலாம் - எப்போது முதல்?...