Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: பித்ரு பக்‌ஷ காலம் தொடக்கம்.. சொத்து வாங்குபவர்களே கவனம்!

Pitru Paksha 2025: பித்ரு பக்ஷம் என்பது இந்துக்களின் முன்னோர்களை வழிபடும் 15 நாள் காலகட்டமாகும். இந்த காலத்தில் புதிய சொத்துக்கள் வாங்குவது, பரிவர்த்தனைகள் செய்வது அசுபம் எனக் கருதப்படுகிறது. ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் குறைவாக இருக்கும். நவராத்திரிக்குப் பிறகு சந்தைச் செயல்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vastu Tips: பித்ரு பக்‌ஷ காலம் தொடக்கம்.. சொத்து வாங்குபவர்களே கவனம்!
வாஸ்து டிப்ஸ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 07 Sep 2025 11:35 AM IST

இந்து மதத்தில் சாஸ்திரங்களின் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது எழுதப்படாத நடைமுறையாகும். எந்த காலத்தில், எந்த நேரத்தில் எதை செய்தால் சரியாக இருக்கும், எதை மேற்கொண்டால் நமக்கு  எதிர்மறையான சம்பவங்கள் நிகழும் என்பது கணிக்கப்பட்டுள்ளது. சாஸ்திர விதிமுறைகளை பின்பற்றி தனி மனித வாழ்க்கை தொடங்கி அசையா சொத்துக்கள் வரை கணிக்கப்பட்டுள்ளது. அப்படியான இந்து மதத்தில் பித்ரு பக்‌ஷ காலம் என்பது மிகவும் முக்கியமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அல்லது புரட்டாசி மாதம் பௌர்ணமிக்குப் பிறகு தொடங்கி புரட்டாசி மாத அமாவாசையுடன் நிறைவடையும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் புரட்டாசி மாத அமாவாசை என்பது பெரிய அமாவாசை என கருதப்படுகிறது. அதனால் இது மஹாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது.

பித்ரு பக்‌ஷ காலம்

அதாவது நம் முன்னோர்கள் பித்ரு உலகத்தில் இருந்து ஆடி அமாவாசையில் புறப்பட்டு மஹாளய அமாவாசையில் நம்முடைய வீட்டில் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அப்படியான இந்த காலக்கட்டம் முன்னோர்களை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நேரமாக பார்க்கப்படுகிறது. இன்று (செப்டம்பர் 7) தொடங்கிய பித்ரு பக்ஷ காலம்,செப்டம்பர் 21, 2025 வரை பதினைந்து நாட்கள் நீடிக்கும். பாரம்பரியமாக வாஸ்து சாஸ்திரத்தில் இது மந்தமான காலகட்டமாகக் கருதப்படுகிறது. இந்த நாட்களில் வீடுகள் வாங்குவது, சொத்துக்களை முன்பதிவு செய்வது அல்லது புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு அசுபமாகக் கருதப்படுகிறது.

Also ReadPitru Paksha 2025: பித்ரு பக்‌ஷ காலம்.. வீட்டில் இதெல்லாம் இருந்தால் நல்லதல்ல

பித்ரு பக்‌ஷ காலத்தின் போது, ​​பெரும்பாலான மக்கள் சொத்துக்களைப் பார்வையிடுவதை கூட தவிர்ப்பதாக சொல்லப்படுகிறது.மேலும் விற்பனை, கொள்முதல் அல்லது வாடகை ஒப்பந்தத்தை இறுதி செய்வது என எதுவும் நடைபெறாது. மஹாளய அமாவாசை வரும் புராட்டாசி மாதமும் எந்தவித நற்காரியங்களும் செய்ய மாட்டார்கள். ஆக அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு சொத்து பதிவுகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் குறைவாகவே இருக்கும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Also Read:  பித்ரு தோஷத்தை போக்கும் சீனிவாச பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?

ஒருவேளை நீங்கள் ஏதாவது சொத்துக்கள் வாங்க முன்பதிவு நாளாக இருந்தால் பணம் செலுத்தி விட்டு அதற்கான ஆவணங்களை நவராத்திரி தினம் தொடங்கும் நாளில் பெறலாம்.  காரணம் நவராத்திரி தொடங்கியவுடன், வீட்டுச் சந்தை வேகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்தியாவில் நவராத்திரி தொடங்கி அடுத்த 4 மாத காலங்களுக்கு பண்டிகை கால சலுகைகள் மற்றும் குறைவான கட்டணத் திட்டங்கள், தள்ளுபடி அல்லது இலவசங்கள் போன்றவை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.