Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aavani Pournami: ஆவணி பௌர்ணமி.. இப்படி தீபமேற்றி வழிபட்டால் நிம்மதி கிடைக்கும்!

2025 ஆம் ஆண்டு ஆவணி பௌர்ணமி செப்டம்பர் 7 ஆம் தேதி வருகிறது. இந்த நாள் லட்சுமி தேவி மற்றும் விஷ்ணுவை வழிபட சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. இத்தகைய பௌர்ணமி அன்று நீராடி, தானம் செய்து, விளக்கு ஏற்றினால் வீட்டில் அமைதி, செழிப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Aavani Pournami: ஆவணி பௌர்ணமி.. இப்படி தீபமேற்றி வழிபட்டால் நிம்மதி கிடைக்கும்!
ஆவணி பௌர்ணமி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 03 Sep 2025 10:48 AM

சாஸ்திரங்களின்படி இந்து மதத்தில் இருக்கும் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஒவ்வொரு தெய்வத்துக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் முழு நிலவு நாளான பௌர்ணமி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில், விஷ்ணுவையும் லட்சுமி தேவியையும் வழிபட்டால் பல்வேறு சிறப்புகள் கிடைக்கும் என பார்க்கப்படுகிறது. மேலும் பௌர்ணமி நாளில், புனித நீராடல் செய்து தானம் செய்தால் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும் என்றும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட பௌர்ணமி நாளில் வீட்டில் அமைதி மற்றும் செழிப்புக்காக சில இடங்களில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்த பரிகாரத்தைச் செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கி, லட்சுமி தேவி வீட்டிற்கு வருவாள் என்று நம்பப்படுகிறது. அதனைப் பற்றி விரிவாக காணலாம். 2025 ஆம் ஆண்டு ஆவணி மாத பௌர்ணமியானது வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.  பௌர்ணமி திதியானது செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1.41 மணிக்கு தொடங்கி இரவு 11.38 மணிக்கு முடிவடைகிறது.

Also Read: 3 தும்பிக்கைகளுடன் விநாயகர் – 250 ஆண்டுகள் பழமையான ஆலயம்… எங்க இருக்கு தெரியுமா?

என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவ பௌர்ணமி நாளில் காலையில் அருகிலுள்ள நீர்நிலைகளில் புனித நீராடிய பிறகு அதன் கரையில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடலாம். மேலும் இந்நாளில் கோயிலுக்கு அல்லது ஏழைகளுக்கு உணவு, பணம் போன்றவற்றை தானம் செய்யலாம். பௌர்ணமி நாளில் விளக்குகளை தானம் செய்வது குடும்பத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவதாக நம்பப்படுகிறது.

அதேபோல் வாழ்க்கையின் துன்பங்கள் மற்றும் கஷ்டங்களிலிருந்து விடுபட மற்றும் விஷ்ணுவின் அருளைப் பெற பௌர்ணமி நாளில் காலையில் நீராடிய பிறகு, ஏதேனும் கோயிலில் பசு நெய்யால் தீபம் ஏற்றி வழிபடவும். அதன் பிறகு, ஆரத்தி எடுத்து மந்திரங்களை உச்சரிக்கவும். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி ஆகியவை கிடைப்பதோடு, அனைத்து துயரங்களும் சிரமங்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

Also Read: Deepam: நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இதேபோல் துளசி செடியின் அருகே ஒரு விளக்கை ஏற்றி, துளசி மாடத்தை 5 அல்லது 7 முறை சுற்றி வந்தால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்வாள் என்பது ஐதீகமாகும். இதனை செய்வதால் வீட்டில் செல்வத்திற்கு ஒருபோதும் பஞ்சமிருக்காது.

பித்ரு பக்‌ஷ காலம்

பௌர்ணமி முடிந்த நிமிடத்தில் இருந்து பித்ரு பக்‌ஷ காலம் தொடங்குகிறது. புரட்டாசி மாத அமாவாசை வரையிலான இந்த காலகட்டத்தில் தானம், தர்மம் செய்தால் புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)