3 தும்பிக்கைகளுடன் விநாயகர் – 250 ஆண்டுகள் பழமையான ஆலயம்… எங்க இருக்கு தெரியுமா?
Heritage Spotlight : உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 3 தும்பிக்கைகளுடன் கூடிய விநாயகர் சிலை கொண்ட புனேவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 250 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டுரையில் அந்த கோவில் குறித்து மேலும் பல சிறப்புகளை பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) கடந்த ஆகஸ்ட் 27, 2025 அன்று முதல் நாடு முழுவதும் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நிகழ்வாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். நாட்டு மக்கள் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், 3 தும்பிக்கைகள் கொண்ட விநாயகர் சிலை பற்றி உங்களுக்கு தெரியுமா? மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலம் புனே அருகே உள்ள சோம்வார்பேத் பகுதியில் அமைந்துள்ளது விநாயகர் கோவில். இந்த விநாயகர் கோவில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்திய அளவில் இந்த கோவில் ஆண்மிக பெருமை வாய்ந்த தளமாக கருதப்படுகிறது. குறிப்பாக வழக்கத்துக்கு மாறாக இந்த விநாயகர் கோவிலில் 3 தும்பிக்கைகளுடன் விநாயகர் சிலை மிகவும் பிரபலமானது.
கோவிலின் தோற்றமும் வரலாறும்
இந்த பிரபலம் வாய்ந்த விநாயகர் கோவில் கடந்த 1754 ஆம் ஆண்டு பீம்கிர்ஜி கோசாவி மற்றும் கிரி கோசாவி ஆகிய யோகிகளால் பணிகள் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து 1770 ஆம் ஆண்டு இந்த கோவிலின் கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது சிவன் கோவிலாக கட்டப்பட்டதாகவும், பிற்காலத்தில் இது விநாயகர் கோவிலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் யோகிகளுக்கான பயிற்சி மையமாகவும் இருக்கிறது. இந்த கோவில் பீம்கிர்ஜி கோசாவியின் சமாதியும் இங்கு இருக்கிறது.




இதையும் படிக்க : எப்போது விநாயகரை வழிபட்டாலும் இடம் பெற வேண்டிய பிரசாதங்கள்!
3 தும்பிக்கைகள் கொண்ட விநாயகர்
View this post on Instagram
அபூர்வமான சிற்பக் கலை
இந்த கோவில் கருங்கல்லை வைத்து செவ்வக வடிவில் இந்த ஆலயம் கட்டப்்பட்டுள்ளது. முகப்பை பார்க்கும்போது பழமையான குகை கோவில்களை நினைவூட்டுவதாக உள்ளது. இங்கு காணப்படும் சிற்ப கலை மற்றக் கோவில்களை விட வித்தியாசமானது. தென்னிந்திய மற்றும் மராத்திய சிற்பக் கலைகளின் கலவையாக இந்த கோவில்களின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிற்பங்களில் சங்கிலியால் கட்டப்பட்ட காண்டாமிருகம், யானைகள், புராண விலங்குகள் மற்றும் போர்க்காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் ஹைலைட்டாக கடந்த 1757 ஆம் ஆண்டு நடந்த பிளாசி போருக்கு பின் நடந்த நிகழ்வுகள் இங்கு சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலயத்தின் கோபுரத்தில் பல சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளதால், ஆரம்பத்தில் இது சிவன் கோவிலாகக் கருதப்பட்டது என்பதையும் உணர முடிகிறது.
இதையும் படிக்க : விநாயகர் சதுர்த்தி: உங்கள் ராசியான எண்களுக்கு ஏற்ற வண்ணம் எது தெரியுமா? எப்படி பயன்படுத்துவது?
விநாயகர் சிலை
கோவிலில் பிரதான அம்சமாக இருக்கும் விநாயகர் கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவரது சிலை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விநாயகர் சிலை உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் 3 தும்பிக்கைகள் மற்றும் ஆறு கரங்களால் ஆனது. இந்த கல்வெட்டுகளில் சமஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பகவத் கீதையின் சில வரிகளும் இடம்பெற்றுள்ளன.
எப்படிச் செல்லலாம்?
இந்த விநாயகர் கோவில் புனே நகரின் கமலா நேரு மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது. புனே ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ அல்லது பஸ் மூலம் செல்ல முடியும்.