Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ganesh Chaturthi: வீட்டில் விநாயகர் சிலை வைக்க போறீங்களா? – பின்பற்ற வேண்டிய விதிகள்!

Ganesh Chaturthi Puja: விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். ஆவணி மாதத்தில் அவதரித்த விநாயகரை வீட்டில் வழிபடும் பொருட்டு களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வாங்கி வழிபடுவது வழக்கம். அப்படியான நிலையில் நாம் சில விதிகளை பின்பற்ற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

Ganesh Chaturthi: வீட்டில் விநாயகர் சிலை வைக்க போறீங்களா? – பின்பற்ற வேண்டிய விதிகள்!
விநாயகர் சிலை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 21 Aug 2025 11:26 AM

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்துக்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான புனித நாளாகும்.  இந்தப் பண்டிகை பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில், விநாயகர் அவதரித்ததாக நம்பப்படுகிறது. அதாவது ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் பார்வதி தேவி மைந்தனாக அவர் தோன்றினார் என புராணத்தில் சொல்லப்படுகிறது. விநாயகர் தடைகளை தகர்ப்பவர் என நம்பப்படுகிறது. அதனால் மக்கள் எந்த விஷயம் செய்தாலும் அதனை விநாயகரை வணங்காமல் செய்வதில்லை. அவரின் ஆசிகளைப் பெற்றால், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும் என ஐதீகமாக பார்க்கிறார்கள். இப்படியான நிலையில் விநாயகர் சதுர்த்தியில் பலரும் வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள். பின்னர் அதனை அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அப்படியாக வீட்டில் விநாயகரை நிறுவுவதற்கு முன், சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அதனைப் பற்றிக் காணலாம்.

2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியானது ஆகஸ்ட் 27ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அதிலிருந்து வாரக்கடைசி வரை 3,5,7,11 நாட்கள் வரை சிலைகள் வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.  விதிகள் கவனமாகப் பின்பற்றப்படாவிட்டால், பூஜைக்கு முழு பலனும் கிடைக்காது என்பதை உணருங்கள்.

Also Read: சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருப்பது எப்படி?

விநாயகர் சிலைகள் – பின்பற்ற வேண்டிய விதிகள்

  • விநாயகர் சிலைகளை வாங்கும்போது எப்போதும் இடது பக்கம் சாய்ந்த தும்பிக்கை கொண்ட சிலையை வாங்கவும். அத்தகைய சிலையை வழிபடுவது தான் நல்ல பலன்களைத் தரும். வலது பக்கம் சாய்ந்த தும்பிக்கை கொண்ட சிலை சித்தி விநாயகரின் வடிவமாகக் கருதப்படுகிறது.  இதனை வழிபடுவது பிரச்னையில்லை. ஆனால் வழிமுறைகள் இன்னும் கடுமையாக இருக்கும்.
  • விநாயகர் சிலையை வைப்பதற்கு முன், பூஜையறையில் வழிபடும் இடத்தை நன்கு சுத்தம் செய்து, அங்கு மஞ்சள் கலந்த நீரை தெளித்து பின் வைக்கவும்.
  • சிலையை நேரடியாக தரையில் வைக்காமல் சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் மூடப்பட்ட சுத்தமான மனைப்பலகை அல்லது அதற்கான இருக்கையில் வைக்கலாம்.
  • முடிந்தவரை, களிமண்ணால் செய்யப்பட்ட சிலையை வழிபடுவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. எக்காரணம் கொண்டும் சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் வகையிலான சிலைகளை வழிபட வேண்டாம்.
  • விநாயகர் சதுர்த்தி நாளில் காலையில் சரியான நேரத்தில் தான் சிலையை நிறுவ வேண்டும். முந்தைய நாள் இரவில் சிலையை நிறுவுவது மங்களகரமானது இல்லை.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. ஈஸியான மோதிச்சூர் லட்டை யானைமுகத்தானுக்கு படையுங்கள்..!

  • விநாயகர் சிலையை எப்போதும் வடகிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும். இந்த திசை வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.
  • விநாயகர் சிலை நிறுவிய பிறகு வழிபாட்டில் அருகம்புல், மோதக கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
  • சிலை பிரதிஷ்டை செய்தப் பிறகு, ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் விநாயகருக்கு கற்பூரம் காட்டி பூஜை செய்து, காணிக்கை செலுத்துவது அவசியமாகும்.
  • விநாயகர் சதுர்த்தி முதல் அதனை நீர் நிலைகளில் கரைக்கும் வரை பக்தர்கள் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நடுவில் கைவிடக்கூடாது.

(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)