Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விநாயகர் சதுர்த்தி: உங்கள் ராசியான எண்களுக்கு ஏற்ற வண்ணம் எது தெரியுமா? எப்படி பயன்படுத்துவது?

Festive Numerology Guide : விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27, 2025 அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் நியூமராலஜி படி நம் ராசியான எண்களுக்கு ஏற்ப வண்ணம் எது? அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி: உங்கள் ராசியான எண்களுக்கு ஏற்ற வண்ணம் எது தெரியுமா? எப்படி பயன்படுத்துவது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 26 Aug 2025 19:31 PM

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 27, 2025 அன்று கொண்டாப்படுகிறது. நாடு முழுவதும் இந்த விழா ஒரு வாரம் முதல் நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து மக்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வீடுகளில் பிள்ளையார் சிலை வைத்து கொழுக்கட்டை போன்ற பிரசாதங்கள் செய்து வழிபடுவது வழக்கம். மக்கள் தங்கள் வீடுகளில் பிரத்யேகமாக உருவாக்கப்படும் விநாயகர் சிலையை, ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்து நீர் நிலைகளில் கரைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த விழாவில் நியூமராலஜி படி 1 முதல் 9 எண்கள் மற்றும் அதற்கேற்ப வண்ணங்களுடன் வைத்து வழிபடுவதன் மூலம் சிறந்த சக்தி மற்றும் செல்வம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

எண். 1 – சிவப்பு

சிவப்பு வண்ணம் வலிமை உற்சாகம் மற்றும் பக்தியைக் குறிக்கும். அன்றைய தினம் புதிய விஷயங்களை தொடங்குபவர்களுக்கு சிவப்பு வண்ணம் மற்றும் 1 ஆம் எண்ணை பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க : போனை எடுங்க.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தட்டி விடுங்க!

எண். 2 –  ராயல் ப்ளூ

எண் 2 என்பது இரட்டை சக்தி மற்றும் சமநிலையைக் குறிக்கும். அதற்கு ஏற்ப ராயல் ப்ளூ அமைதி, தெளிவு  ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த வண்ணத்தை கொண்டாட்டங்களில் சேர்த்தால் உறவுகளில் நிலைத்தன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.

எண்.3  – மஞ்சள்

எண் 3 என்பது ஞானம், நிறைவு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது. மேலும் மஞ்சள் நிறம் ஒளி மற்றும் விழா உணர்வை வெளிப்படுத்துகிறது. எனவே விநாயகர் சதுர்த்தி அன்று மஞ்சள் பூக்கள் மற்றும் உடைகள் பயன்படுத்துவதன் மூலம் செல்வமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

எண்.4 – பச்சை

எண். 4 என்பது விருத்தி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை குறிக்கிறது. அதே போல பச்சை நிறம் இயற்கை, புதுமை மற்றும் நிலைத்தன்மையை குறிக்கும். பச்சை நிறம் அணிவது இயற்கை மற்றும் தெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை

எண். 5 – கிரே

எண்.5 என்பது சுதந்திரம், மாற்றம் மற்றும் ஏற்றுமதியைக் குறிக்கும். அதே போல கிரே வண்ணம் அமைதி மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது. எனவே விநாயகர் சதுர்த்தியில் கிரே உடை அணிவது அல்லது கிரே வண்ணத்தில் அலங்காரம் செய்து கொள்வது உங்கள் வாழ்க்கையை அமைதியானதாகவும் சிறப்பாகவும் மாற்றும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்க : விநாயகருக்கு உகந்த 21 இலை, மலர் வழிபாடு!

எண்.6  – ஆரஞ்சு

எண்.6 என்பது அன்பு, பராமரிப்பு,  மற்றும் சமூக உறவுகள் ஆகியவற்றைக் குறிக்கும். அதே போல ஆரஞ்சு வண்ணம் வெப்பம், பாசம், மற்றும் பக்தியை வெளிப்படுத்துகிறது. விநாயகர் சதுர்த்தியில் ஆரஞ்சு வண்ணம் அணிவது குடும்ப மற்றும் சமூக உறவுகள் மேம்படும் என்பது நம்பிக்கை.

எண்.7 – வெள்ளை

எண்.7 என்பது அறிவு மற்றும் தெய்வீக நம்பிக்கையை குறிக்கிறது. அதே போல வெள்ளை நிறம் தூய்மை, அமைதி மற்றும் ஆன்மிக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வெள்ளை உடைகள் மற்றும் வெள்ளை நிறத்தில் அலங்காரம் செய்து கொள்வது வீட்டில் அமைதி மற்றும் தூய்மையை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

எண்.8 – பிங்க்

எண் .8 என்பது சமநிலை, அன்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. பிங்க் வண்ணம் கொண்டாட்டங்களில் கருணையும் அமைதியும் சேர்க்கும் என நம்பப்படுகிறது.

எண். 9  (தங்கம், வயலட் மற்றும் தாமரை வெள்ளை)

எண்.9 என்பது ஆன்மீக அறிவை குறிக்கும்.  மேலும் தங்கம்  – செல்வம் மற்றும் வளத்தை குறிக்கும். அதே போல வயலெட் நிறம் மாற்றம் மற்றும் விழிப்புணர்வை குறிக்கும், தாமரை வெள்ளை நிறம் தெய்வீகம் எண்ணம், ஆன்மீகம் ஆகியவற்றைக் குறிக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

உங்கள் ராசியான எண்களுக்கு ஏற்ப வண்ணங்களை பயன்படுத்தலாம். வீடுகளின் வாசலில் கோலம்போடும்போது உங்ளகள் ராசியான வண்ணங்களை பயன்படுத்தலாம். வீடுகளில் அலங்காரம் செய்யும்போது உங்களுக்கு ராசியான நிறத்தை பயன்படுத்தலாம். மேலும் உடைகள் போன்றவற்றில் இதனை பயன்படுத்தலாம்.