Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. இந்த பொருட்கள் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்!

2025 Diwali : 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. விஷ்ணு நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் இந்த நன்னாளில், வாஸ்துப்படி சில அதிர்ஷ்டப் பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வருவது மங்களகரமானது என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. இந்த பொருட்கள் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்!
தீபாவளி வாஸ்து டிப்ஸ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 15 Oct 2025 11:30 AM IST

இந்து மதத்தில் தீபாவளி பண்டிகை மிகவும் முக்கியமான பண்டிகையாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு அப்பண்டிகை அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் விஷ்ணு பகவான் நரகாசுரனை வதம் செய்ததே முதன்மையாக விஷயமாக பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்நாளில் எண்ணெய் குளியல், புத்தாடை, இறை வழிபாடு, இனிப்புகள் செய்தல், பட்டாசு வெடித்தல் என விதவிதமாக கொண்டாட்டங்கள் அரங்கேறுகிறது. இப்படியான நிலையில் தீபாவளி நெருங்கி வருவதால் ஒரு பக்கம் வீட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.  அதே வேளையில், மக்கள் பொருட்கள் வாங்க ஷாப்பிங் செய்யத் தொடங்கிவிட்டனர்.

இருப்பினும், தீபாவளிக்கு முன்பு சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வருவது மங்களகரமானது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில புனிதமான பொருட்கள் செல்வத்தை ஈர்க்கவும், எதிர்மறை சக்தியை நீக்கவும், லட்சுமி தேவியை திருப்திப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. அந்த அதிர்ஷ்ட பொருட்கள் என்ன என்பதைக் காணலாம்.

Also Read: நான்கு திசையில் 4 பொருட்கள்.. செல்வம் கொட்டும்..

தீபாவளியைக் கொண்டாடும்போது வாஸ்து சாஸ்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீட்டை அலங்கரித்தல், வீட்டில் புதிய பொருட்களை வாங்குதல் போன்ற விஷயங்கள் வாஸ்துவின் படி செய்யப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது.

என்னென்ன பொருட்களை கொண்டு வரலாம்?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஆமை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டங்களுக்கு முன்பு உலோக ஆமையை வீட்டிற்கு கொண்டு வருவது மங்களகரமானது. இது விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் நேர்மறை ஆற்றலையும் தெய்வீக ஆசீர்வாதங்களையும் தருவதாக நம்பப்படுகிறது.

தேங்காய் லட்சுமி தேவியின் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தூய்மை மற்றும் மிகுதியைக் குறிக்கிறது. பாரம்பரியத்தின் படி, தீபாவளிக்கு முன் உங்கள் வீட்டிற்கு ஒரு தேங்காயைக் கொண்டு வருவது மங்களகரமானது. பூஜை அறையில், குறிப்பாக லட்சுமி தேவியின் சிலைக்கு அருகில் அதை வைத்திருப்பது, வாஸ்து குறைபாடுகளை நீக்கி, வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

Also Read:  ஒர்க் ஃப்ரம் ஹோம் பிரச்னைகளை தீர்க்கும் வாஸ்து டிப்ஸ்!

துளசி செடி இந்து கலாச்சாரத்தில் புனிதமான தாவரங்களில் ஒன்றாகும். இது சுற்றுச்சூழலை சுத்திகரிக்கிறது. எதிர்மறையை நீக்குகிறது. நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. தீபாவளிக்கு முன் இந்த துளசி செடியை உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் வைக்கவும்.

ஸ்ரீ யாத்திரை, குபேர யந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது, இது செல்வத்தையும் வாய்ப்புகளையும் ஈர்க்கும் ஒரு சக்திவாய்ந்த வடிவியல் சின்னமாகும். ஸ்ரீ யந்திரத்தை வழிபடுவது வாஸ்து குறைபாடுகளை நீக்குகிறது. இது நிதி சிக்கல்களைக் குறைத்து, வாழ்க்கையில் வாய்ப்புகளை உருவாக்க உதவுகிறது. இந்த ஸ்ரீ யந்திரத்தை வீட்டின் பூஜை அறையில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைக்கலாம்.

தீபாவளி பண்டிகைகளின் போது விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புதிய சிலைகளை வாங்குவது ஒரு முக்கியமான பாரம்பரியமாகும். லட்சுமி மற்றும் கணபதி சிலைகளை வீட்டிற்குள் கொண்டு வருவது லட்சுமி மற்றும் விநாயகர் தெய்வத்தின் ஆசீர்வாதத்துடன் செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் ஞானத்தைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. வீட்டின் பூஜை அறையின் வடகிழக்கு மூலையில் இந்த சிலைகளை வைக்க வேண்டும்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)