Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: வீட்டில் இந்த திசையில் புத்தர் சிலை இருந்தால் செல்வம் கொட்டும்!

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் புத்தர் சிலையை வைப்பது நல்ல அதிர்ஷ்டத்தையும் அமைதியையும் தரும். வடக்கு அல்லது கிழக்கு நுழைவாயிலில், பூஜையறையில் அல்லது பிரம்மஸ்தானத்தில் வைக்கலாம். குழந்தைகள் அறையில் வைப்பதால் கல்வி ஞானம் பெருகும் என நம்பப்படுகிறது. சிரிக்கும் புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

Vastu Tips: வீட்டில் இந்த திசையில் புத்தர் சிலை இருந்தால் செல்வம் கொட்டும்!
புத்தர் சிலை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 02 Sep 2025 12:35 PM

ஞானம், சமநிலை மற்றும் அமைதியின் சின்னமாக அறியப்படுபவர் புத்தர் என்கிற கௌதம புத்தர். வாஸ்து சாஸ்திரத்தின் படி புத்தர் சிலை என்பது மங்களகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இவை ஒரு வீட்டின் செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கின்றன. ஒரு வீட்டில் புத்தர் சிலை சரியான நிலையில் வைக்கப்படும் போது அங்கு நேர்மறையான எண்ணம் பரவுகிறது. மேலும் குடும்பத்தில் நல்ல ஆரோக்கியம் மற்றும் அமைதி கிடைக்கிறது. அப்படியான புத்தர் சிலையை வீட்டிற்கு கொண்டு வரும்போது சரியான வண்ணங்களையும், பொருட்களையும் தயார் செய்ய வேண்டும்.அப்படியாக புத்தர் சிலை வீட்டில் எந்த திசையில் வைத்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி நாம் காணலாம்.

உங்கள் வீட்டில் புத்தர் சிலைகளை வீட்டு நுழைவாயிலிலோ அல்லது நுழைவாயிலிலின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கலாம். இதனால் நேர்மறை ஆற்றல், அமைதி ஆகியவை பரவும். வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றல் நுழைவது தடுக்கப்படும். தியானம் செய்யும் அல்லது பிரார்த்தனை செய்யும் புத்தரை வைக்க சரியான இடம் பூஜையறையாகும். இந்த சிலை ஞானத்தையும் நித்திய அறிவையும் குறிக்கும் என்பதால் கிழக்கு, வடகிழக்கு (ஈசானிய மூலை) திசை சரியானதாகும்.

Also Read:  சாமந்தி பூ செடியை இந்த திசையில் வீட்டில் நட்டால் அதிர்ஷ்டம்!

வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு வீட்டின் மையப்பகுதி ஒரு புனிதமான இடமாக பார்க்கப்படுகிறது. இணக்கமான சூழலை உருவாக்கும் இந்த இடம் பிரம்மஸ்தானம் என அழைக்கப்படுகிறது. எனவே இந்த இடத்தில் எந்த அளவிலும் சிலைகளை நாம் வைக்கலாம். நம்முடைய வீட்டின் ஹாலில் சுவரில் புத்தரின் ஓவியத்தை வைத்திருப்பது அமைதியை கொடுக்கும். அதேபோல் சிலைகளை வைத்தால் அதிர்ஷ்டம் கிட்டும் எனவும் நம்பப்படுகிறது.

ஹாலில் இந்த இடத்தில் தான் புத்தர் சிலை இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. அதனால் டேபிள், அலமாரி என எதில் வேண்டுமானாலும் சிலைகளை வைப்பது சிறந்ததாகும். குழந்தைகள் படுக்கையறையில் மேல் பகுதியில் புத்தர் சிலை வைப்பது சிறந்ததாகும். நேர்மறை ஆற்றல்களை ஊக்குவித்து குழந்தைகளுக்கு எழும் பதற்றம், பயம் ஆகியவை தணியும் என நம்பப்படுகிறது. குழந்தைகள் படிக்கும் அறையில் வைத்தால் கல்வி ஞானம் அதிகரிக்கும்.

Also Read:  வீட்டில் இந்த போட்டோவெல்லாம் மாட்டாதீங்க.. அப்புறம் சிக்கல் தான்!

கிழக்கு திசையில் புத்தக அலமாரியில் சிரிக்கும் புத்தர் சிலையை வைத்தால் அமைதி மற்றும் மகிழ்ச்சி குடும்பத்தில் நிலவும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. தோட்டத்தில் அல்லது பால்கனியில் வைப்பது அமைதியான சூழலை உருவாக்கும். மேலும் உங்கள் வீட்டில் வடக்கு மூலை காலியாக இருந்தால் குபேரனால் ஆளப்படும் அந்த இடத்தில் புத்தர் சிலை வைப்பது செல்வ செழிப்பை தரும்.