AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Astrology: சிவபெருமானுக்கு பிடித்த 6 ராசிகள்.. கிடைக்கப்போகும் பலன்கள்!

ஜோதிடப்படி, சிவபெருமான் அருள் செய்யும் ராசிகளான மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 2025ம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வருமானம் அதிகரிப்பு, வேலை வாய்ப்புகள், திருமணம் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். சிவ வழிபாடு இன்னும் சிறப்பான பலன்களைத் தரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Astrology: சிவபெருமானுக்கு பிடித்த 6 ராசிகள்.. கிடைக்கப்போகும் பலன்கள்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Jun 2025 16:45 PM IST

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்கள் ஆகிய யாவும் ஒவ்வொரு கடவுளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்கள் கூட ஒவ்வொரு கடவுளுக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் முழு முதற் கடவுளாக அறியப்படும் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த சில ராசிகள் உள்ளதாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நேர்மை, தைரியம் என அனைத்திற்கும் பெயர் போனவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாக  அவர்கள் மீது சிவபெருமான் அன்பு, கருணை கொண்டு வாழ்க்கையில் முன்னேற உதவுவார் என்றும் ஜோதிடம் கூறுகிறது. இந்த குணங்களைக் கொண்ட ராசிகள் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீனம்  ஆகியவை திகழ்கிறது. இந்த ராசிகள் என்ன மாதிரியான பலன்களைப் பெற போகிறது என பார்க்கலாம்.

  1. மேஷம்: இந்த ராசிக்காரர்கள் அசாதாரண சுமைகளையும் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய சூழலில் இருப்பார்கள். தலைமைத்துவ பண்புகள் இருக்கும் நிலையில், ராசி அதிபதியால் ஆளப்பட விரும்புகிறார். இதனால் 2025 ஆம் ஆண்டு இந்த ஆண்டு கொஞ்சம் அதிர்ஷ்டத்துடன் சிறப்பாகக் கடந்து செல்லும். வருமானம் கணிசமாக அதிகரிக்கும். வேலையில் அதிகாரம் பெறுவார்கள். உயர் மட்ட தொடர்புகள் ஏற்படும். சொத்துக்கள் சேரும். பணியிடங்களில் செயல்திறன் நன்கு அங்கீகரிக்கப்படும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல பொருளாதார வசதி கொண்ட குடும்பத்துடன் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
  2. கடகம்: தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்ற இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானின் ஆசிர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக திகழ்வார்கள். இந்த 2025ஆம் ஆண்டு ஆண்டு நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேறும். இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி சிவ வழிபாடு செய்வதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்கி பல வழிகளில் முன்னேற்றம் அடைவார்கள். மேலும் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். வேலையில் உயர் பதவிகள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  3. சிம்மம்: தலைமைத்துவப் பண்புகளையும், அனைவரையும் அரவணைக்கும் தத்துவத்தையும் கொண்ட இந்த ராசிக்காரர்கள், சிவனிடம் அளவற்ற பாசம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.  இந்த ராசியின் அதிபதியான சூரிய பகவான், சிவனின் நண்பர் என்பதால், இந்த ராசிக்காரர்கள் ஆண்டு முழுவதும் சிவனிடம் சிறப்பு அருளையும் பெறுபவர்களாக திகழ்கிறார்கள். அதேசமயம் வருமானம் பெருமளவில் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் மேம்படும். ஊழியர்களுக்கான தேவை அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
  4. விருச்சிகம்: தைரியம், துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றால் சிறப்பிக்கப்படும் இந்த ராசிக்காரர்களின் அதிபதி செவ்வாய்  என்பதால், சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர்களாக திகழ்கிறார்கள். அடிக்கடி சிவனை வழிபடுவது 2025ஆம் ஆண்டு இந்த ராசிக்கு ராஜயோகம் மற்றும் தனயோகம் ஆகியவற்றை நிச்சயமாகக் கொண்டுவரும். பங்குகள் மற்றும் முதலீடுகள் என  பல வழிகளில் வருமானம் அதிகரிக்கும். பெரும்பாலான தனிப்பட்ட மற்றும் நிதி சிக்கல்கள் தீர்க்கப்படும். வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
  5. தனுசு: இந்த ராசியில் சிவபெருமானின் கவனமும் பக்தியும் அதிகமாகத் தெரியும் என நம்பப்படுகிறது.  ஏனெனில் பிடித்ததை விட்டுவிடாமல், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இந்த ராசியினர் இருப்பார்கள். முடிந்தவரை சிவனை வழிபடுவதன் மூலம்,  ஆண்டு முழுவதும் அவரின் கருணைப் பார்வை இந்த ராசியின் மீது பட வாய்ப்புள்ளது. திட்டமிட்ட பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். வருமானம் கணிசமாக அதிகரிக்கும். பங்குகள் மற்றும் முதலீடுகள் லாபகரமாக மாறும்.
  6. மீனம்: எந்த விஷயம் என்றாலும் நேர்மையுடனும் செயல்படும் இந்த ராசிக்காரர்கள், ஆன்மீக சிந்தனைகள் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் 2025ஆம் ஆண்டு சிவபெருமானின் முழு ஆசியையும் பெறுபவர்களாக திகழ்வார்கள். இந்த ராசியினருக்கு வாழ்க்கையில் முக்கியமான ஆசைகளை நிறைவேறுவதோடு மட்டுமல்லாமல், மகிழ்ச்சிக்கும் பஞ்சமிருக்காது. சனியின் தாக்கமும் பெருமளவில் குறையும். வருமானத்திற்கு குறைவிருக்காது. ஆன்மீக நடவடிக்கைகளில் அதிகமாக பங்கேற்பீர்கள். வேலையில் அதிகாரம் பெறுவீர்கள். தொழில்முறை மற்றும் வேலை தொடர்பான காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் சூழலும் அமையும்.

(ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)

Follow Us