கார்த்திகை மாதம் 2026: உலகளவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
Karthigai Month: கார்த்திகை மாதம் 2026ல் உடல்நலப் பாதிப்புகள், நோய்த்தொற்றுகள் மற்றும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார். புயல், கனமழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் அரசியல், சமூக மாற்றங்கள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேசமயம், திருவண்ணாமலை மகா தீபம், ஐயப்ப பக்தர்களின் மாலை அணிதல் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகளால் இம்மாதம் சிறப்புப் பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டின் கார்த்திகை மாதம் (Karthigai Month) நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த மாதத்தில் உலகளவில் பல்வேறு மாற்றங்களும் சவால்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடர் ஷெல்வி தனது கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக ஆரோக்கியம், இயற்கை பேரிடர்கள், அரசியல் சூழல் மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பாக அவர் சில எச்சரிக்கைகளை முன்வைத்துள்ளார். மேலும், பசுக்களின் புனிதத்தன்மை மற்றும் அவற்றின் பாரம்பரிய பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read: கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் விளக்கேற்றினால் என்ன பலன்?
ஆரோக்கியம் மற்றும் நோய்த்தொற்று பாதிப்புகள்
இந்த மாதத்தில் சில வகையான நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான சூழல் உருவாகலாம் என்றும், குறிப்பாக 50 வயதைக் கடந்தவர்கள் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஷெல்வி குறிப்பிட்டுள்ளார். அக்கி போன்ற தோல் பாதிப்புகள், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படக்கூடிய தொற்றுகள் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இயற்கை பேரிடர்கள் மற்றும் வானிலை மாற்றங்கள்
கார்த்திகை மாதத்தில் புயல், கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புகள் ஏற்படலாம் என்பது அவரது கணிப்பாகும். இலங்கை, நேபாளம், ஜப்பான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும், இந்தியாவின் மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, மூணாறு, வால்பாறை போன்ற இடங்களிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மழை மற்றும் வெள்ள அபாயம்
தமிழகத்தைப் பொறுத்தவரை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கலாம் என்றும், தேனி மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும், திருப்பூரில் தீ விபத்துகள் குறித்தும் எச்சரித்துள்ளார்.
அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள்
உலக நாடுகளில் அரசியல் ஸ்திரமின்மை, கூட்டணி மாற்றங்கள், அதிகாரப் போட்டிகள் மற்றும் சமூக அமைதியின்மை அதிகரிக்கலாம் என ஷெல்வி தெரிவித்துள்ளார். மதம் மற்றும் இன அடிப்படையிலான மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் போன்றவை ஏற்படக்கூடும் என்றும் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் விளக்கேற்றினால் என்ன பலன்?
ஆன்மிக முக்கியத்துவம் பெறும் கார்த்திகை மாதம்
மற்றொரு புறம், கார்த்திகை மாதம் ஆன்மிக ரீதியாகவும் சிறப்பானதாக இருக்கும். ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல், திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறும். மேலும், பசுக்களின் புனிதத்தன்மை மற்றும் அவற்றின் பாரம்பரிய பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.