Astrology: செப்டம்பர் 21ல் சூரிய கிரகணம்.. இந்த 4 ராசிக்கு செம லக்!
2025 Solar Eclipse: 2025 செப்டம்பர் 21 அன்று மகாளய அமாவாசை நாளில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியாவிட்டாலும், ஜோதிட ரீதியாக முக்கியமானது. ரிஷபம், மிதுனம், மகரம், கும்பம் ராசிகளுக்கு நன்மைகள் ஏற்படும். ரிஷப ராசிக்கு நிதி லாபமும், மிதுன ராசிக்கு தொழில் முன்னேற்றமும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதம் வந்து விட்டாலே பலருக்கும் மஹாளய அமாவாசை தான் நினைவுக்கு வரும். வருடத்தின் 12 அமாவாசைகளில் மிகப்பெரிய அமாவாசையான இந்நாள் வழிபாடு செய்யப்படுகிறது. இந்நாளில் கடவுள் வழிபாடு, முன்னோர் வழிபாடு மேற்கொண்டால் பல்வேறு விதமாக பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டு சற்று வித்யாசமான காலமாக மாறியுள்ளது. காரணம் ஆவணி மாதம் பௌர்ணமி நாளில், அதாவது பித்ரு பக்ஷத்தின் தொடக்கத்தில் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இது இந்தியாவில் நன்றாக தெரிந்தது. இப்போது அடுத்த 15 நாட்களில், புரட்டாசி மாதத்தின் மஹாளய அமாவாசை நாளில் சூரிய கிரகணம் ஏற்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என கூறப்பட்டுள்ளது. எனினும் ஜோதிடத்தில் கிரகணங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பவையாக உள்ளது.
சூரிய கிரகணம் எப்போது?
2025 ஆம் ஆண்டு, செப்டம்பர் 21 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த கிரகணம் மகாளய அமாவாசை நாளில் நிகழ்வதால் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு 11 00 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 3 24 மணி வரை நீடிக்கும். அந்த நேரம் இந்தியாவில் நள்ளிரவு என்பதால் இந்த கிரகணம் தெரியாது. எனவே, கிரகண சூதக காலம் பொருந்தாது. அதேசமயம் நியூசிலாந்து, பிஜி தீவுகள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் சூரிய கிரகணம் தெரியும்.
Also Read: செப்டம்பர் 21ல் சூரிய கிரகணம்.. கவனமுடன் இருக்க வேண்டிய 3 ராசிகள்
ஜோதிடத்தின்படி, சூரிய கிரகணங்கள் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சூரியனில் ஏற்படும் கிரகணம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சுப மற்றும் அசுப சக்திகள் இரண்டும் வலுவாக இருக்கும். எனவே இந்த நேரத்தில் பரிகாரங்கள் மற்றும் சடங்குகள் சரியாகச் செய்யப்பட்டால், நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது. இந்த கிரகணம் கன்னி ராசியில் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதனால் 4 ராசிகளுக்கு நன்மை விளையும் என சொல்லப்பட்டுள்ளது.
4 ராசிகளில் நிகழப்போகும் மாற்றம்
- ரிஷபம்: ரிஷப ராசியின் 11வது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது வருமானம், லாபம் மற்றும் சமூக உறவுகளைக் குறிக்கிறது. மீன ராசியின் அதிபதியான குரு இப்போது ரிஷபத்தில் இருக்கிறார். இதன் காரணமாக, நிதி நன்மைகள் ஏற்படும். பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் பண பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன. நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வார்த்தைகள் மிதமாகவும், நடத்தை பணிவாகவும் இருந்தால் வெற்றியை அடைய முடியும். சூரிய கிரகணத்திற்குப் பிறகு கோதுமை தானம் செய்வதால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். மேலும் மேற்கொள்ளும் வேலையில் உள்ள தடைகள் நீங்கும்.
- மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு பத்தாவது வீட்டில் சூரிய கிரகணம் ஏற்படப் போகிறது. இது வேலை மற்றும் தொழிலுக்கான வீடாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, சூரிய கிரகணத்திற்குப் பிறகு அவர்களின் தொழில் வாழ்க்கை ஒரு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் அதன் பலன்களைப் பெறுவீர்கள். ராசியினரின் பேச்சுத் திறன், வணிக அறிவு மற்றும் மேலாண்மைத் திறன் காரணமாக தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் அவை அனைத்தும் பனி போல மறைந்துவிடும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் முயற்சிகளுக்கு விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். சூரிய கிரகணத்திற்குப் பிறகு ஏழைகளுக்கு செம்பு பொருட்களை தானம் செய்வது வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும்.
Also Read: ஒரு எலுமிச்சை போதும்.. வாழ்க்கையில் இவ்வளவு பிரச்னை தீருமா?
- மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு மூன்றாவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது தைரியம், கடின உழைப்பு, குறுகிய பயணங்களுடன் தொடர்புடைய ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் அவர்களுக்கு மிகுந்த மன அமைதியைத் தரும். ராசியினர் தொழில் மற்றும் வணிகத் துறையில் புதிய உயரங்களை அடைவார்கள். அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் தொடர்புடையவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். முன்னோர்களின் சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சூரிய கிரகணத்திற்குப் பிறகு கருப்பு எள் அல்லது உளுந்து தானம் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும்.
- கும்பம்: கும்ப ராசியின் இரண்டாம் வீட்டில் சூரிய கிரகணம் ஏற்படும். இது பணம், பேச்சுத்திறன் மற்றும் குடும்ப விவகாரங்களுடன் தொடர்புடையது. இந்த கிரகணம் எதிர்பாராத பல நன்மைகளைத் தரும். நீங்கள் முன்பு பணம் தொடர்பான விஷயங்களில் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து லாபம் பெறுவீர்கள். காப்பீடு, போனஸ் மற்றும் பரம்பரை சொத்துக்களிலிருந்து பணம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமாக உள்ளது. குடும்பத்தில் உள்ள பழைய பிரச்சினைகள் தீரும். அமைதியான சூழ்நிலை இருக்கும். சூரிய கிரகணத்திற்குப் பிறகு அரிசி தானம் செய்வது மன அழுத்தத்தை குறைக்கும்.
(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றிற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)