Vastu Tips: பணப் பிரச்னைகளை போக்கும் ஏலக்காய் வழிபாடு.. செய்வது எப்படி?
திரிகோண யாலகுல தீப உபயம் என்ற பரிகாரம் நிதிப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவும் என நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை 108 ஏலக்காய்களைப் பயன்படுத்தி, ஓம் என்ற எழுத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும். 21 நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் துன்பம், கஷ்டம் நமக்கு விளைகிறதோ அங்கெல்லாம் நமக்கு ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய தீர்வை அடைய நாம் எளிதாக பயணப்பட முடியாது. தீர்வு கிடைக்க பரிகாரம், தானம், நேர்த்திகடன் ஆகியவை செலுத்த வேண்டியதாக இருக்கும். இது கடவுளுக்கும், மனிதனுக்கும் ஒரு அசைக்க முடியாத பிணைப்பை உண்டாக்கும் என நம்பப்படுகிறது. அப்படியான நிலையில் மனிதர்களின் பெரும் தேவை பணமாக உள்ளது. உலகை வெல்ல பணம் அவசியம் என்ற எண்ணத்தில் உறவுகள், தனிப்பட்ட வாழ்க்கையை மறந்து ஓடிக்கொண்டிருப்பவர்கள் அதிகம். அப்படியான நிலையில் வரவுக்கேற்ற செலவு செய்யாமல் கடன் வாங்குவதால் நிதி பிரச்னையில் சிக்குபவர்கள் ஏராளம். அப்படியான கடன் உள்ளிட்ட நிதி பிரச்னையில் சிக்குபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
திரிகோண யாலகுல தீப உபயம்
அதுதான் ‘திரிகோண யாலகுல தீப உபயம்’. இந்த பரிகாரம் நிதிப் பிரச்சினைகளை நீக்கும் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை செய்தால் அதிக நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பரிகாரம் ஏலக்காய் கொண்டு செய்யப்பட வேண்டும். ஏலக்காய் நறுமணப் பொருள் மட்டுமல்லாமல் நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபட நமக்கு உதவும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. காரணம் இந்த ஏலக்காய் சுக்கிர கிரகத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
Also Read: Vastu Tips: வாழ்க்கையில் இந்த 5 பொருட்களை யாரிடமும் கடன் வாங்காதீர்கள்!
சுக்கிரன் மகிழ்ச்சி, செல்வம், அன்பு மற்றும் செழிப்புக்குக் காரணமானவராக திகழ்கிறார். அத்தகைய ஏலக்காய்கள் சுக்கிரனுக்கு மிகவும் பிரியமானவையாக உள்ளது. அவற்றைப் பயன்படுத்துவது வாழ்க்கையில் செல்வத்தையும் நேர்மறை ஆற்றலையும் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த பரிகாரத்திற்கு சரியாக 108 ஏலக்காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதைச் செய்வது சுக்கிர கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை நீக்கும் என நம்பப்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
முதலில், ஒரு பெரிய தட்டு முழுவதும் குங்குமத்தை கொட்டி அதில் ஒரு முக்கோணத்தை வரையவும். முக்கோணத்தின் நடுவில் அரிசியில் ஓம் என்ற எழுத்தை எழுதவும். இப்போது ஒரு கிண்ணத்தில் சரியாக 108 ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கோணத்திற்கு அருகில் மூன்று விளக்குகளை வைத்து அவற்றில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றவும்.
மேலும் நறுமணமுள்ள அகர்பத்திகளை ஏற்றி வைக்கவும். இப்போது ஒரு ஏலக்காயை எடுத்து, தட்டின் நடுவில் உள்ள ஓம் என்ற எழுத்தின் மீது வைக்கவும். அதே நேரத்தில் “ஓம் ஸ்ரீம் தன்ய பே தன்ய ஸ்வாஹா” என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து அந்த என்ற எழுத்தின் மீது 108 ஏலக்காய்களை அர்ச்சனை செய்யவும்.
Also Read: Vastu Tips: வீட்டுக்கான வாஸ்து.. இந்த தப்பை செய்யாதீங்க.. அப்புறம் நஷ்டம் தான்!
பின்னர் இந்த ஏலக்காயை ஒரு சிவப்பு துணியில் சுற்றி வைக்கவும். அதை ஒரு கண்ணாடி ஜாடியில் வைக்கவும். மறுநாள், அதே பூஜையை செய்யவும். இதை தொடர்ந்து 21 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். 21 நாட்களுக்குப் பிறகு ஏலக்காயை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு ஒரு வருடம் கைபடாத இடத்தில் வைக்கவும். ஒரு வருடம் கழித்து ஏலக்காயை ஓடும் ஆற்றின் நீரில் எறியுங்கள். இந்த பரிகாரம் எப்பேர்ப்பட்ட நிதி சிக்கல்களை நீக்கும் என்று நம்பப்படுகிறது.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)