Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: வாழ்க்கையில் இந்த 5 பொருட்களை யாரிடமும் கடன் வாங்காதீர்கள்!

ஜோதிட சாஸ்திரப்படி, கடன் வாங்குவது வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும். சில பொருட்களை மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக் கூடாது என்பது ஐதீகமாக உள்ளது. இவற்றை கடன் வாங்குவது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. எனவே, தன்னிறைவுள்ள வாழ்க்கைக்கு கடன் வாங்காமல் இருப்பது நல்லது என சொல்லப்படுகிறது.

Vastu Tips: வாழ்க்கையில் இந்த 5 பொருட்களை யாரிடமும் கடன் வாங்காதீர்கள்!
வாஸ்து டிப்ஸ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 12 Aug 2025 11:18 AM

தற்போதுள்ள சூழ்நிலையில் கடன் வாங்குவது என்பது அனைவராலும் பின்பற்றக்கூடிய ஒரு வழக்கமாக இருந்துள்ளது. சேமிப்பு, இருப்பதை வைத்து வாழ்வது, நாம் நாமாக இருப்பது என்பதெல்லாம் வார்த்தையில் மட்டும்தான் இருக்கும் அளவுக்கு மற்றவர்கள் முன்பு நாம் செழிப்பாக இருக்க வேண்டும் என்பது மாறி இருப்பது போல் காட்டிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். அதற்காக கடன் வாங்கியாவது அதனை செயல்படுத்த வேண்டும் என முயல்கிறோம். இத்தகைய செயல்பாடுகள் வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரு ஒருவர் கடன் வாங்காமல் இருப்பதை வைத்து சிறப்பான வாழ்க்கை வாழ்கிறாரோ, தனக்கான வாழ்க்கையை வாழ்கிறாரோ அவர் வாழ்க்கையில் நிச்சயம் ஒவ்வொரு நிலையிலும் வளர்ச்சியை அடைவார் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது. கடன் என்ற உடன் நாம் பணத்தை மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடாது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தில் நாம் மற்றவர்களிடத்தில் வாங்கி பயன்படுத்தக் கூடாத ஐந்து பொருட்களை பற்றி காணலாம்.

மற்றவர்கள் பயன்படுத்திய பொருட்களை வாங்கி பயன்படுத்துவது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்ககூடும். இதனால் நாம் செய்யப்போகும் காரியம் கூட திசை மாறிப் போகலாம் என சொல்லப்படுகிறது. இது உடல் நல பாதிப்பு, துரதிஷ்டம் ஆகியவையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

வாங்க கூடாத பொருட்கள் என்னென்ன?

  • ஆடைகளை அணிய வேண்டாம்: நண்பர்கள், வீட்டில் உள்ள குடும்பத்தினர் இடையே துணிகளை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் இருக்கும். பார்க்க நன்றாக உள்ளது, ஒரே சைஸ், எதுவும் நினைக்க மாட்டோம் என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் இப்படி செய்யாதீர்கள். ஆடைகள் அதிக எதிர்மறை சக்தியைக் கொண்டுள்ளன. நீங்கள் வேறொருவரிடமிருந்து பெறும் அல்லது அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆடைகளை அணிந்தால், ஒருவரின் எதிர்மறை ஆற்றல் மற்றொரு நபருக்கு மாற்றப்படும் என்று சொல்லப்படுகிறது.
  • நகைகள் வாங்கக்கூடாது: நாம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறோம் என்றால் நகைகளை கடன் வாங்கி அணிந்து போகும் வழக்கம் காலம் காலமாக உள்ளது. கவரிங் ஆக இருந்தாலும் அது நீங்கள் வாங்கியதாக இருக்க வேண்டும், காலம் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது. அதனால் நீங்கள் இப்போது கஷ்டப்பட்டாலும் எதிர்காலத்தில் சிறப்பான வாழ்க்கையை பெறுவீர்கள். அப்போது நகைகள் வாங்கி குவிப்பீர்கள்.
  • வாட்ச் கடன் பெறக்கூடாது: ஒருவர் அணியும் வாட்ச் நேரத்தை மட்டுமல்ல, அவரது நல்ல மற்றும் கெட்ட காலங்களையும் குறிக்கிறது. அதனால்தான் வேறொருவரின் பயன்படுத்தப்பட்ட வாட்சை, உங்கள் கையில் மாட்டுவது நல்லதல்ல. அந்த பழக்கத்தை இன்றே விட்டுவிடுங்கள்.
  • காலணிகள்: காலணிகள் அல்லது ஷூக்களை ஒரே சைஸ் என்ற பெயரில் மாற்றுவதும் நல்லதல்ல என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் வேறொருவரின் காலணிகளை அணிந்தால், அவர்களின் சனி தொடர்பான பிரச்சினைகள் உங்களை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.
  • எழுதுப் பொருட்கள்: கூர்முனை கொண்ட பேனா போன்ற எழுது பொருட்களை கடன் வாங்கக்கூடாது. வங்கி படிவம் அல்லது பிற ஆவணங்களை நிரப்பும் பொருட்டு பேனா கடன் வாங்கும் நிலை நம்மில் பலருக்கும் உள்ளது. இது நாம் மேற்கொள்ளப்போகும் காரியத்தை செயல்படுத்த விடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன்மிக மற்றும் சாஸ்திர நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)