Solar Eclipse: செப்டம்பர் 21ல் சூரிய கிரகணம்.. கவனமுடன் இருக்க வேண்டிய 3 ராசிகள்
செப்டம்பர் 21, 2025 அன்று நிகழும் சூரிய கிரகணம், மிதுனம், கன்னி, தனுசு ராசிகளுக்கு சவால்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மிதுன ராசிக்காரர்கள் வேலை, உறவுகளில் கவனம் செலுத்த வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் உடல்நலம், நிதி மேலாண்மையில் கவனம் தேவை என கணிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடத்தில் கிரகண நிகழ்வுகள் முக்கிய பங்கை வகிக்கிறது. செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இரத்த நிலவு என முழு சந்திர கிரகணம் இந்தியாவில் முழுமையாக தெரிந்தது. இதனைத் தொடர்ந்து வானியலில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் இந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்படப் போகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் புரட்டாசி மாதத்தின் பித்ரு பக்ஷ காலத்தின் அமாவாசை நாளில், அதாவது செப்டம்பர் 21, 2025 அன்று நிகழப்போகிறது. ஆன்மீக ரீதியாக, கிரகணங்கள் ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்று நம்பப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் சரியாக ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் விளைவு சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் , இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இருப்பினும், ஜோதிடத்தில் இது நிச்சயமாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சூரிய கிரகணம் கன்னி ராசியான உத்திரம் நட்சத்திரத்தில் (2,3.4 பாதங்கள்) நிகழும். எனவே, அதன் விளைவு காரணமாக, சில ராசிகளுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இது ஒரு சிறப்பு விளைவை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், சூரிய கிரகணத்தால் கீழே உள்ள 3 ராசிக்காரர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு சிரமங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: பார்வையை மாற்றும் குரு.. அதிர்ஷ்ட மழையில் 3 ராசிகள்.. முழு ராசிபலன் இதோ!
அந்த வகையில் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அனுசரித்து செல்லவும். சண்டைகளால் வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே வார்த்தைகளை நிதானத்துடன் கையாளவும். முதலீட்டில் ஏற்படும் இழப்பு காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்க வேண்டாம். மனதை அமைதியாக வைத்திருப்பதன் மூலம், நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் கலைத்துறையில் இருந்தால், பொறுப்புடனும், கவனமுடனும் நடக்க வேண்டும்.
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த விஷயத்திலும் கவனக்குறைவாக இருக்காதீர்கள். வேலைகளில் நிதானத்துடன் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இந்த நேரத்தில் எந்த பெரிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். ஏனென்றால் இந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள் எதிர்மறையான விளைவை உண்டாக்கலாம். குழந்தைகள் தொடர்பான கவலையும் கன்னி ராசிக்காரர்களை தொந்தரவு செய்யும். தொழிலில் பண இழப்பு காரணமாக வீட்டில் நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. , சூழ்நிலை என்னவாக இருந்தாலும் பொறுமையையும் தைரியத்தையும் கடைப்பிடிக்கவும். எந்த கடனையும் வாங்காதீர்கள். இந்த நேரத்தில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த நீங்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
Also Read: Tirupati Temple: திருப்பதியில் வரும் ரூல்ஸ்.. ரீல்ஸ் வீடியோ எடுத்தால் கடும் நடவடிக்கை!
தனுசு ராசிக்காரர்கள் அலுவலகத்தில் பல சவால்களைச் சந்திப்பார்கள். ஆனால் பிரச்சினைகளுக்கு பயப்பட வேண்டாம்.. அவற்றை ஒவ்வொன்றாகத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் நபர்களை நீங்கள் சந்திப்பீர்கள். ஆனால் வேலை தொடர்பான மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்கள் கூடுதல் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். சில பழைய நோய்கள் உங்களை மீண்டும் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது.
(ஜோதிட சாஸ்திர நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)