AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டைப்பிங் vs ரைட்டிங்: உங்கள் மூளையைக் கூர்மையாக்குவது எது தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் உலகில் கணினியில் டைப் செய்வதை விட கைகளால் பேனா பிடித்து எழுதுவது மனித மூளையின் கற்றல் திறன் மற்றும் நினைவகத்தை உருவாக்கும் அலைவரிசைகளை பல மடங்கு தூண்டுகிறது என்று நார்வே விஞ்ஞானிகளின் புதிய நரம்பியல் ஆய்வு முடிவுகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 26 Jun 2026 19:23 PM IST
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் கணினி மற்றும் மொபைல் போன்ற சாதனங்களில் டைப் செய்யும் பழக்கம் நம்மிடையே பெருமளவு அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் பேனா பிடித்து கைகளால் எழுதும் முறையை படிப்படியாக மறந்து வருவதோடு, வங்கிகள் போன்ற இடங்களில் படிவங்களை நிரப்பும்போது கூட கைகள் திணறும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

1 / 5
நார்வே நாட்டு விஞ்ஞானி ஆட்ரி வான் டெர் மீர் என்பவர் 36 பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு நவீன 'ஹை-டென்சிட்டி ஈஇஜி' ஸ்கேன் சோதனை மூலம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். மாணவர்கள் டிஜிட்டல் பேனாவால் கைகளால் எழுதும்போதும், அதே வார்த்தைகளைக் கணினியில் டைப் செய்யும்போதும் அவர்களின் மூளையின் மின்சார செயல்பாடுகள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டன.

2 / 5
கைகளால் எழுதும்போது மனித மூளையில் கற்றல் திறனுக்கும் மற்றும் புதிய நினைவகங்களை உருவாக்குவதற்கும் காரணமான 'தீட்டா' மற்றும் 'ஆல்பா' எனப்படும் மூளை அலைகளின் செயல்பாடு கணிசமாக அதிகரிக்கிறது. மூளையின் நடுப்பகுதி மற்றும் பின் parietal பகுதி ஆகியவை இந்த செயல்பாட்டின் போது அதிக விழிப்புணர்வோடு இயங்குவதால் கவனம், மொழி செயலாக்கம் மற்றும் காட்சிப் புரிதல் மேம்படுகிறது.

3 / 5
டைப்பிங் செய்யும்போது விரல்களால் ஒரே மாதிரியான பொத்தான்களைத் திரும்பத் திரும்ப அழுத்தும் எந்திரத்தனமான வேலை மட்டுமே நடப்பதால் மூளையின் இணைப்புப் பாதைகள் பலவீனமாக அமைகின்றன. ஆனால் கைகளால் எழுதும்போது கண்களின் பார்வை, விரல்களின் அசைவு, கைகளின் கட்டுப்பாடு மற்றும் பேனாவைத் தொடும் உணர்வு எனப் பல உடல் சார்ந்த செயல்பாடுகளை மூளை ஒருங்கிணைக்கிறது.

4 / 5
இன்றைய டிஜிட்டல் உலகில் வேகமான தொடர்புகளுக்கும், நீண்ட கட்டுரைகளை எழுதுவதற்கும் டைப்பிங் முறை அவசியமானது என்றாலும் அது விழிப்புணர்வையும் நினைவில் வைத்துக் கொள்ளும் திறனையும் குறைத்துவிடுகிறது. கைகளால் எழுதும்போது வேகம் சற்றே குறைந்தாலும், அந்த மெதுவான வேகம் ஒரு தகவலின் மீது அதிக கவனம் செலுத்த மூளையைக் கட்டாயப்படுத்தி, தகவல்களை ஆழமாகப் பதிய வைக்கிறது.

5 / 5
Follow Us