AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உடல் எடையை குறைக்க உதவுமா மேஜிக் ஏபிசி ஜூஸ்..?

ABC Juice: நெல்லிக்காய், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்ந்த ஏபிசி ஜூஸ் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. இதில் சர்க்கரை சேர்க்காமலும், நார்ச்சத்தை வடிகட்டாமலும் தயாரித்த உடனே காலையிலோ அல்லது உடற்பயிற்சிக்கு முன்போ 150 முதல் 250 மில்லி வரை அருந்துவது சிறந்த பலனைத் தரும்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 19 Oct 2026 07:00 AM IST
நெல்லிக்காய், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்ந்த இந்த ஏபிசி ஜூஸில் வைட்டமின் சி, நைட்ரேட்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டின் போன்ற உடலுக்குத் தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) தூண்டுவதோடு, கண்பார்வைத் திறன் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தப் பெரிதும் துணைபுரிகின்றன.

1 / 5
இந்த ஜூஸில் உள்ள இயற்கையான ஊட்டச்சத்துக்கள் அடிக்கடி தேவையில்லாமல் சாப்பிடும் பசி உணர்வைக் கட்டுப்படுத்தி, உடற்பயிற்சி செய்யும்போது தேவையான ஆற்றலை அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகின்றன. மேலும், கலோரி நிறைந்த செயற்கைக் பானங்களுக்கு மாற்றாக இதைக் குடிப்பதன் மூலம் உடலின் மெட்டபாலிக் ஆரோக்கியம் அதிகரித்து, கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது.

2 / 5
ஒரு சிறிய நெல்லிக்காய், ஒரு பீட்ரூட் மற்றும் இரண்டு கேரட் சேர்த்து தயாரிக்கும் இந்த பானத்தில் சர்க்கரையோ அல்லது தேனோ சேர்க்காமல் காலை வேளையிலோ அல்லது உடற்பயிற்சிக்கு முன்போ குடிப் பது நல்ல பலனைத் தரும். பெரியவர்கள் தினமும் 150 முதல் 250 மில்லி வரை அருந்தலாம்; தயாரித்த உடனே குடிப்பது நல்லது, நீண்ட நேரம் வைத்தால் இதன் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.

3 / 5
ஜூஸ் செய்யும்போது காய்கறிகளின் நார்ச்சத்துக்கள் வெளியேறிவிடாமல் இருக்க அதை வடிகட்டாமல் அப்படியே அல்லது ஸ்மூத்தியாகக் குடிப்பதே ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக உயர்வதைத் தடுக்கும். வெறும் ஜூஸ் மட்டுமே உடலைக் குறைத்துவிடும் என்று முழுமையாக நம்பாமல், சரியான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இதை ஒரு துணையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

4 / 5
இயற்கை உணவாக இருந்தாலும் சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் இந்த ஜூஸைத் தவிர்க்க வேண்டும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே குடிக்க வேண்டும், ஏனெனில் அளவுக்கு அதிகமான பயன்பாடு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

5 / 5
Follow Us