AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூப்பர் 8 போட்டிகளில் அபிஷேக் சர்மா இடம் பெறுவாரா? பயிற்சியாளர் சொன்ன முக்கிய தகவல்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகளில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் அணியில் அவர் இடம்பெறுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் மோர்னே மோர்கல் விளக்கமளித்துள்ளார்.

Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Feb 2026 21:45 PM IST
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இந்த 2026 டி20 உலகக் கோப்பையில் எதிர்பாராத விதமாக மோசமான ஃபார்மில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உலகின் நம்பர் 1 டி20 சர்வதேச பேட்ஸ்மேனாக தொடரில் களம் இறங்கிய அபிஷேக், லீக் சுற்றில் தொடர்ச்சியாக 3 முறை டக் அவுட் ஆனது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

1 / 5
அமெரிக்கா அணிக்கு எதிராக முதல் பந்திலேயே அவுட்டாகி கோல்டன் டக் ஆனார். பின்னர் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராகவும் ரன் எடுக்காமல் வெளியேறியுள்ளார். சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தயாராகிவரும் நிலையில், அவர் மோசமான ஃபார்மில் இருப்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

2 / 5
இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வருகிற பிப்ரவரி 22, 2026 அன்று எதிர்கொள்கிறது.

3 / 5
இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அபிஷேக்கிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதில், “அபிஷேக் குறித்து அணிக்குள் எந்த விவாதமும் இல்லை. அவர் உலக தரமான வீரர். இதுவரை அவரிடம் இருந்து பெரிய ரன்கள் வரவில்லை என்றாலும், மற்ற வீரர்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

4 / 5
முக்கியமான கட்டத்தை இந்தியா எட்டியுள்ள நிலையில் அபிஷேக் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. வலைபயிற்சியில் அவர் பந்தை நன்றாக அடித்து வருகிறார். இதே வேகத்தோடு போட்டியிலும் அவர் சிறப்பாக ரன்களை எடுப்பார்,” என்றார்.

5 / 5