Quick Cooking Tips: சமைக்கும்போது பருப்பு வேக நேரம் எடுக்கிறதா..? அருமையான டிப்ஸ் இதோ!
Faster Lentils: காலை வேளையில் நேரம் பற்றாக்குறையா இருக்கும்போது, வேகமாக பருப்பு சமைக்க இந்த குறிப்புகள் உதவும். பருப்பை முன்கூட்டியே ஊற வைப்பது, சூடான நீர் பயன்படுத்துவது, உப்பு பின்னர் சேர்ப்பது, மஞ்சள் மற்றும் எண்ணெய் சேர்ப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இது பருப்பை வேகமாக வேக வைக்கும்.

அலுவலகம் செல்லும் முன் வேகமாக சமையல் (Cooking) செய்ய பலவிதமான விஷயங்களை மேற்கொள்வார்கள். இதற்காக, இரவே காய்கறிகளை (Vegtables) வெட்டி வைத்துவிடுவார்கள், தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைப்பார்கள், கீரை செய்யவேண்டுமென்றால் அதை கிள்ளி எடுத்து வைப்பார்கள். இப்படி, தங்களுக்கு காலையில் எதுவும் தொல்லையாக அமைந்துவிடக்கூடாது என்பதை தயாராக வைப்பார்கள். இப்படி ஒவ்வொன்றாக நாம் செய்யும் விஷயம் பலன் அளித்தாலும், காலையில் பருப்பு (Lentil) வேக வைக்க நேரம் எடுக்கும். இது நீங்கள் வேலைக்கு செல்வதை தாமதப்படுத்தும், உங்களை கடுப்பாக்கும். இந்தநிலையில், பருப்பு வகைகளை வேகமாக வேகவைக்க எளிதான குறிப்புகளை இங்கே தெரிந்து கொள்வோம்.
பருப்பு என்றும் அழைக்கப்படும் பயறு வகை, ஃபோலேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி1 நிறைந்ததாக இருப்பது போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்க பங்களிக்கின்றன. கூடுதலாக, பயறு வகைகளில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தரும்.
ALSO READ: எலுமிச்சைத் துண்டை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன ஆகும் தெரியுமா? ஆச்சரிய தகவல்




பருப்பை ஊறவைக்கவும்:
சமைப்பதற்கு முன் பருப்பை குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். இது பருப்பை மென்மையாக்கி வேகமாக சமைக்க உதவும்.
சூடான நீரைப் பயன்படுத்துங்கள்:
பருப்பு விரைவாக வேகவில்லை என்றால், குளிர்ந்த நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரைச் சேர்க்கவும். சூடான நீர் பருப்பை விரைவாக மென்மையாக்க உதவுகிறது.
உப்பு லேட்டாக சேர்க்கவும்:
பலர் பருப்பை சமைக்கும் போது உப்பு சேர்க்கிறார்கள். இதனால் பருப்பை கடினமாக்கி மெதுவாக வேக வைக்கிறது. எப்போதும் பருப்பை சமைத்த பிறகு உப்பு சேர்க்கவும்.
மஞ்சள் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்:
பருப்பை சமைக்கும் போது, சிறிது மஞ்சள் மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். இது பருப்பை வேகமாக வேக வைப்பதற்கும், அதன் சுவையை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.
சமையல் சோடா மந்திரம்:
பருப்பு மிகவும் கடினமாக இருந்தால், அதில் ஒரு சிட்டிகை சமையல் சோடாவைச் சேர்க்கவும். இது பருப்பு உடனடியாக மென்மையாக்குகிறது.
ALSO READ: இந்த 5 பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்காதீங்க! காரணம் இதுதான்!
குக்கரின் மூடியை சரியாக மூடுங்கள்:
சில நேரங்களில் குக்கரின் அழுத்தம் சரியாக உயராது. இதற்கு மூடி மற்றும் விசில் சரியாக பொருந்த வேண்டும். அப்போதுதான் பருப்பு சரியாக வேகும். பழைய பருப்பைத் தவிர்க்கவும்: மிகவும் பழைய பருப்பை சமைக்க அதிக நேரம் எடுக்கும். புதிய பருப்பைப் பயன்படுத்த முயற்சிக்கவும், இதனால் அவை விரைவாக சமைக்கப்பட்டு சுவையாக மாறும்.