400 ஆண்டுகள் பழமையான வீட்டை வாங்கிய தம்பதி – காத்திருந்த ஆச்சரியம்
Amazing Discovery : பிரிட்டன் நாட்டில் ஒரு தம்பதி 400 ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டை வாங்குகிறார்கள். இதனையடுத்து அந்த வீட்டை அவர்கள் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கும்போது தோட்டத்தில் கிணறு ஒன்று இருப்பதை கண்டு ஆச்சரியமடைகின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

பிரிட்டனில் ஒரு தம்பதி 400 ஆண்டுகள் பழமையான வீட்டை வாங்குகிறார்கள். அவர்களின் புதிய வீட்டின் முற்றத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு அற்புதமான ரகசியம் மறைந்திருப்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது. ஒலிவியா மற்றும் ஜாக் மன்றோ என்ற அந்த தம்பதி தங்கள் வாங்கிய பழங்கால வீட்டை புதுப்பிப்பது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் (Instagram) பகிர்ந்து கொண்டனர். அதில் வீட்டின் தோட்டத்தில் 72 அடி ஆழமான கிணற்றைக் கண்டுபிடித்தனர். அவர்கள் 2023 இல் வீட்டை வாங்கினார்கள். மிகவும் பழமையான இந்த வீட்டின் அழகை மீட்டெடுப்பதே அவர்களின் நோக்கம். வீட்டை புதுப்பிக்க மட்டும் 2,00,000 டாலர்கள் செலவிட்டனர்.
வார இறுதி நாட்களில் நேரம் எடுத்துக்கொண்டு அதை மெதுவாக தாங்களாகவே சரிசெய்ய முடிவு செய்தனர். இந்த நேரத்தில், அவர்கள் பல பழமையான பொருட்களைக் கண்டுபிடித்தனர். சுவர்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பழைய ஃபயர் கேம்ப் போன்ற ஒன்றையும் அவர்கள் கண்டுபிடித்தனர் ஆனால், உண்மையான அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அவர்களின் தோட்டத்தில் காணப்பட்ட பழைய கிணறுதான்.




இதையும் படிக்க : பெங்களூரில் ஆட்டோ ஓட்டும் இளம் பெண்.. காரணம் இதுதான்.. சுவாரஸ்ய கதை!
கிணறு எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், ஒலிவியா, முற்றத்தில் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அப்போது மண்ணை அகற்றும்போது திடீரென்று ஒரு வட்டமான செங்கல் அமைப்பை காண்கிறார். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவர் உடனடியாக தன் கணவரை அழைத்து காட்டுகிறார். அப்போதுதான் அவர்களுக்கு தங்கள் வீட்டு முற்றத்தில் கிணறு இருப்பது புரிந்தது. வீட்டிற்கு வேறு இருந்த காரணத்தால், அவர்கள் அதை ஒரு வருடம் மூடி வைத்திருந்தார்கள். ஆனால் சமீபத்தில் அவர்கள் அதை மீண்டும் திறந்து கிணற்றைச் சரிசெய்யத் தொடங்கியிருக்கின்றனர்.
இதையும் படிக்க : சீனாவில் போக்குவரத்தை சரிசெய்யும் ரோபோ.. ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ!
வைரலாகும் கிணறு வீடியோ
View this post on Instagram
கிணற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு வலுவான செங்கல் சுவர் கட்டப்பட்டது. மேலே ஒரு இரும்பு வலை பொருத்தப்பட்டது.. விரைவில் அதன் மீது ஒரு வலுவான மூடியும் நிறுவப்படும் என்று அவர்கள் கூறினர். இது விளக்குகள் மற்றும் பம்ப் வசதிகளுடன் இருக்கும் என்று ஒலிவியா கூறினார். அந்தக் காலத்தின் கட்டிடக்கலையைக் கண்டு வியந்ததாகக் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அதை எப்படிக் கட்டினார்கள் என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது என்று அவர் கூறினார். வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் மிகவும் சுவாரஸ்யமான பரிந்துரைகளை வழங்கினர். மதிப்புமிக்க பொருட்கள், ஆயுதங்கள் அல்லது பிற பொருட்கள் பழைய கிணறுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒருவர் பதிலளித்தார். ஒருவேளை இதிலும் ஏதாவது புதையல் கிடைக்கலாம்.