AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பால், கேஸ் இல்லாமல் ஒரு நிமிடத்தில் டீ போடலாம் வாங்க..!

டீ குடிக்க வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் அடுப்பில் பால் காய்ச்சி டீ தயாரிக்க வேண்டியதில்லை. தயாரித்து வைத்திருக்கும் டீ பிரீமிக்ஸில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு கப் சுடுநீரில் கலந்து நன்றாக கிளறினால் போதும். சில நிமிடங்களிலேயே சுவையான டீ தயாராகிவிடும் என்பதால், அவசர நேரங்களில் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.

பால், கேஸ் இல்லாமல் ஒரு நிமிடத்தில் டீ போடலாம் வாங்க..!
டீImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 22 Aug 2026 06:57 AM IST

பால், கேஸ் இல்லாமலேயே எளிதாக இன்ஸ்டன்ட் டீ தயாரிக்க டீ பிரீமிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளலாம். டீத்தூள், சர்க்கரை, ஏலக்காய், சுக்குப் பொடி ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பயன்படுத்தலாம். இந்தக் கலவையை நன்றாக சலித்து அதனுடன் பால் பவுடர் சேர்க்க வேண்டும். தயாரித்த பிரீமிக்ஸை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கலாம். டீ தேவைப்படும் நேரத்தில் ஒரு ஸ்பூன் பிரீமிக்ஸை சுடுநீரில் கலந்து கிளறினால் போதும். அவசர நேரம், அலுவலகம் மற்றும் பயணங்களின்போது இந்த முறை மிகவும் வசதியாக இருக்கும். இருப்பினும் சர்க்கரை மற்றும் டீயை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

டீ பிரியர்களுக்கு ஈஸியான வழி

மழை நேரமாக இருந்தாலும், வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உடனடியாக ஒரு கப் டீ குடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர். ஆனால் டீ போடுவதற்கு அடுப்பு பற்றவைத்து, தண்ணீர் கொதிக்க வைத்து, தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக சேர்ப்பது சில நேரங்களில் சிரமமாக இருக்கும். குறிப்பாக பயண நேரங்களில் இந்தப் பிரச்சனை மேலும் அதிகமாக இருக்கும். இதற்கு எளிய தீர்வாக வீட்டிலேயே டீ பிரீமிக்ஸ் தயாரித்து வைத்துக்கொள்ளலாம்.

டீ பிரீமிக்ஸ் தயாரிக்கும் முறை

இந்த எளிய முறையில் டீத்தூள், சர்க்கரை, ஏலக்காய் மற்றும் சுக்குப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தயாரிக்கலாம். இதற்காக அரை கப் டீத்தூள், முக்கால் கப் சர்க்கரை, 9 முதல் 10 ஏலக்காய் மற்றும் அரை டீஸ்பூன் சுக்குப் பொடி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஒவ்வொரு முறையும் தனித்தனியாக பொருட்களை அளந்து சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

பால் பவுடர் சேர்ப்பது முக்கியம்

அரைத்த கலவையை முதலில் டீ வடிகட்டியின் உதவியுடன் சலித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு கப் பால் பவுடரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை காற்று புகாத சுத்தமான டப்பாவில் சேமித்து வைத்துக்கொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஈரப்பதம் உள்ளே செல்லாமல் டப்பாவை நன்றாக மூடி வைப்பது அவசியம்.

Also Read: இரவில் கீரை சாப்பிடுவது ஆபத்தா? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

சுடுநீரில் கலந்து டீ தயார்

டீ குடிக்க வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் அடுப்பில் பால் காய்ச்சி டீ தயாரிக்க வேண்டியதில்லை. தயாரித்து வைத்திருக்கும் டீ பிரீமிக்ஸில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு கப் சுடுநீரில் கலந்து நன்றாக கிளறினால் போதும். சில நிமிடங்களிலேயே சுவையான டீ தயாராகிவிடும் என்பதால், அவசர நேரங்களில் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.

பயணத்திற்கும் ஏற்றது

இந்த டீ பிரீமிக்ஸின் மற்றொரு சிறப்பு, இதை சிறிய காற்றுப்புகாத டப்பாவில் எடுத்துச் செல்ல முடியும் என்பதாகும். அலுவலகம், பயணம் அல்லது வீட்டிற்கு வெளியே இருக்கும் நேரங்களில் சுடுநீர் கிடைத்தால் இந்த கலவையை பயன்படுத்தி எளிதாக டீ தயாரிக்கலாம். இருப்பினும், சர்க்கரை மற்றும் டீயை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது; குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் அல்லது உணவுக் கட்டுப்பாடுகள் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற அளவைத் தேர்வு செய்வது அவசியம்.

Follow Us