Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

New Year Recipe: வந்துவிட்டது புத்தாண்டு.. கேரட் ஹல்வா, தேங்காய் லட்டு ரெசிபி இதோ!

Special Sweet Recipes For New Year 2026: கடைகளில் வாங்கப்படும் இனிப்புகளில் கலப்படம் மற்றும் அதிகப்படியான இனிப்பு உடல் நலத்தில் பிரச்சனையை உருவாக்கும். அதேநேரத்தில், வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் (Sweets) சுவையாக மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கும். புத்தாண்டை (New Year 2026) வரவேற்க சூப்பரான தேங்காய் லட்டு மற்றும் கேரட் ஹல்வா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

New Year Recipe: வந்துவிட்டது புத்தாண்டு.. கேரட் ஹல்வா, தேங்காய் லட்டு ரெசிபி இதோ!
தேங்காய் லட்டு - கேரட் ஹல்வாImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 30 Dec 2025 17:04 PM IST

ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 31ம் தேதி இரவு முதல் ஜனவரி 1ம் தேதி காலை வரை, வீட்டிற்கு விருந்தினர்கள் குவிய தொடங்குவார்கள். அவர்கள் வருவதற்கு முன்கூட்டியே இனிப்பு கொடுக்க ரெடியாக இருந்தால் கொண்டாட்டம் இன்னும் அற்புதமாக மாறும். இதற்காக கடைகளில் வாங்கப்படும் இனிப்புகளில் கலப்படம் மற்றும் அதிகப்படியான இனிப்பு உடல் நலத்தில் பிரச்சனையை உருவாக்கும். அதேநேரத்தில், வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் (Sweets) சுவையாக மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கும். புத்தாண்டை (New Year 2026) வரவேற்க சூப்பரான தேங்காய் லட்டு மற்றும் கேரட் ஹல்வா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பால் வேண்டாம்! தக்காளி கொண்டு தரமான பர்ஃபி.. தனித்துவ ஸ்வீட் ரெசிபி!

தேங்காய் லட்டு செய்ய தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் – 2 கப்
பால் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
ட்ரை ப்ருட்ஸ் – நறுக்கப்பட்டது.
சர்க்கரை – 1 கப்

தேங்காய் லட்டு செய்வது எப்படி..?

  1. முதலில் ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்து துருவிய தேங்காய், சர்க்கரை மற்றும் பால் சேர்க்கவும். தீயை குறைவாக வைத்து, இந்த கலவையை அடிப்பகுதியில் அடி பிடிக்காமல் அல்லது வாணலியில் ஒட்டாமல் இருக்க தொடர்ந்து கிளற தொடங்கவும்.
  2. இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது சில நிமிடங்களுக்குள் தேங்காய் மற்றும் பால் நன்றாக இணைந்து கெட்டியாக தொடங்கும்.
  3. தேங்காய் மற்றும் பால் நன்றாக கெட்டியாக உருவாக தொடங்கியது, ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், அடுப்பை அணைத்து கலவையை சிறிது ஆற விடவும். இப்போது, கையால் லட்டுகளாக உருவாக்கலாம்.
  4. அதன்படி, இந்த கலவையை வெதுவெதுப்பாக இருக்கும்போது, உங்கள் உள்ளங்கையில் சிறிது நெய் தடவி சிறிய லட்டுகளை உருவாக்க தொடங்குங்கள். இறுதியாக நறுக்கிய ட்ரை ப்ரூட்ஸ்களை அலங்கரிக்கலாம். இந்த லட்டுகள் சுவையானதாக இருக்கும் என்பதால் புத்தாண்டில் ருசிக்க ஏதுவானதாக இருக்கும்.

கேரட் ஹல்வா:

தேவையான பொருட்கள்

  • கேரட் (துருவியது) – 4 கப்
  • பால் – 2 கப்
  • நெய் – 2 ஸ்பூன்
  • சர்க்கரை – 1 கப்
  • ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
  • முந்திரி, பாதாம் – சிறிது நறுக்கியது
  • திராட்சை – 1 ஸ்பூன் (விரும்பினால்)

ALSO READ: விசேஷ நாட்களில் ஸ்வீட் விருந்து.. சூப்பரான பீட்ரூட் ஹல்வா செய்முறை!

கேரட் ஹல்வா செய்வது எப்படி..?

  1. கேரட் ஹல்வா செய்ய, முதலில் கேரட்டை நன்கு கழுவி துருவவும். ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி, துருவிய கேரட்டைச் சேர்த்து, லேசாக வதக்கவும். அவை வெந்தவுடன், பால் சேர்த்து, குறைந்த தீயில் கொதிக்க விடவும். பால் முழுவதுமாக ஆவியாகும் வரை கிளறவும். பால் ஆவியாகும் போது, ​​சர்க்கரையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. தொடர்ந்து நெய் சேர்த்து பிரிந்து வரும் வரை ஹல்வாவை வேக விடவும். இறுதியாக, ஏலக்காய் தூள், நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து மேலும் 2-3 நிமிடங்கள் சமைக்கவும். கேரட் ஹல்வா தயார்.