Beauty Tips: கழுத்தில் உள்ள கருமையான வடுவால் கவலையா..? இவை உங்கள் பிரச்சனையை சரிசெய்யும்!
Remove Dark Spots On The Neck: கழுத்துக்கு அருகில் உள்ள கரும்புள்ளிகளுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக, சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படுதல், இறந்த செல்கள் குவிதல், ஹார்மோன் மாற்றங்கள், உடல் பருமன் அல்லது சுத்தம் செய்யாத பழக்கம் போன்றவை ஆகும்.

கழுத்தில் கரும்புள்ளிகள்
கழுத்தில் (Neck) கருமையான புள்ளிகள் (Dark Patches) மற்றும் அடுக்குகள் உள்ளவர்கள் அழகை தன்னம்பிக்கையின்மையை இழக்க தொடங்குகிறார்கள். பலர் குளிக்கும்போது கழுத்தின் பின்புறத்தை கவனிப்பதும் இல்லை, அதை சரியாக அழுத்தி தேய்ப்பதும் இல்லை. பொதுவாக, இவை உருவாவதற்கு காரணம் கழுத்தில் வியர்வை அதிகளவில் குவியும் என்பதால் இந்த கருமையான புள்ளிகள் உருவாகிறது. இருப்பினும், கழுத்துக்கு அருகில் உள்ள கரும்புள்ளிகளுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக, சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படுதல், இறந்த செல்கள் குவிதல், ஹார்மோன் மாற்றங்கள், உடல் பருமன் அல்லது சுத்தம் செய்யாத பழக்கம் போன்றவை ஆகும். இருப்பினும், சில வீட்டு செயல்முறைகள் மூலம் இந்த கரும்புள்ளிகளை பெருமளவில் குறைக்க முடியும்.
கழுத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க என்ன செய்யலாம்..?
எலுமிச்சை மற்றும் தேன் பேக்:
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும். அதன்படி, எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கருமை வடுக்களை நீக்கும், அதேநேரத்தில் தேன் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவி செய்யும்.
ALSO READ: கண்ணாடி அணிவதால் சரும தோற்றத்தில் தொய்வா? மூக்கின் கரும்புள்ளிகளை இப்படி அசால்ட்டாக போக்கலாம்!
பால் மற்றும் குங்குமப்பூ:
கருமை நிற வடுகளை நீக்க சில குங்குமப்பூ இழைகளை பாலில் ஊற வைக்கவும். பின்னர், இந்த குங்குமப்பூ ஊறவைத்த பாலை உங்கள் கழுத்தில் உள்ள கருமையான இடங்களில் பருத்தி பஞ்சை பயன்படுத்தி தடவவும். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இப்போது, உங்கள் சருமம் பிரகாசமாகவும் மென்மையாகவும் மாறும்.
கற்றாழை ஜெல்:
சுத்தமான கற்றாழை ஜெல்லை உங்கள் கழுத்தில் தடவவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் கழுவவும். இது நாளடைவில் கழுத்தில் உள்ள கருமையான வடுக்களை படிப்படியாக நீக்க உதவும்.
கடலை மாவு மற்றும் தயிர் பேக்:
2 தேக்கரண்டி கடலை மாவு, 1 தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து பேஸ்ட் செய்து கழுத்தில் தடவலாம். இது காய்ந்ததும், தேய்த்து கழுவதும். இப்படி செய்வது இறந்த செல்களை நீக்கு, கரும்புள்ளிகளை குறைக்க உதவும்.
உருளைக்கிழங்கு சாறு:
தோல் நீக்கிய பச்சையான உருளைக்கிழங்கை அரைத்து, அதன் சாற்றைப் பிரித்தெடுத்து, கழுத்தில் தடவலாம். இது காய்ந்ததும் தண்ணீர் ஊற்றி கழுவலாம். உருளைக்கிழங்கில் உள்ள இயற்கையான ப்ளீச்சிங் கலவை கரும்புள்ளிகளைக் குறைக்க உதவும்.
ALSO READ: அதிக மன அழுத்தம் முடி உதிர்வை ஏற்படுத்துமா..? சரிசெய்வது எப்படி..?
தினமும் இதை செய்வது நல்லது..
- நீங்கள் ஒவ்வொரு நாளும் குளிக்கும்போது உங்கள் கழுத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
- வெளியே செல்லும்போது கழுத்து மற்றும் பிற பகுதிகளில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.
- மிகவும் இறுக்கமான ஆடைகளை கழுத்து பகுதிகளில் அணிவதை தவிர்க்கவும்.