Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamannaah’s Beauty Secret: பாலை போல் ஜொலிக்க வேண்டுமா..? முக பளபளப்புக்காக தமன்னா சொல்லும் அழகு ரகசியம்!

Tamannaah Bhatia's Skincare Routine: தமன்னா தனது அழகு ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். முகப்பரு பிரச்சனைக்கு தனது எச்சிலைப் பயன்படுத்துவதாகவும், காபி பொடி, தேன், ரோஸ் வாட்டர், கடலை மாவு மற்றும் தயிர் கலந்த முகமூடிகளை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார். அவரது அழகு குறிப்புகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Tamannaah’s Beauty Secret: பாலை போல் ஜொலிக்க வேண்டுமா..? முக பளபளப்புக்காக தமன்னா சொல்லும் அழகு ரகசியம்!
நடிகை தமன்னாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Aug 2025 14:39 PM

தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் என தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை தமன்னா (Tamannaah). எந்தவொரு கருத்தையும் தனக்கு சரி என்று தோன்றினால் தயங்காமல் வெளிப்படுத்துவார். அதேபோல், பளபளப்பான சருமம் (Skin Care) மற்றும் உடற்தகுதிக்கான குறிப்புகள் குறித்தும் தமன்னா பாட்டியா அடிக்கடி பொதுவெளியிலும், பேட்டிகளிலும் பகிர்ந்து கொள்வார். இந்த முறையும் தமன்னா அதே போன்று போல்டான ஒரு விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தநிலையில், என்ன குறிப்பு அது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: கருவளையம் உங்கள் முக அழகை கெடுக்கிறதா? இயற்கையான முறையில் சரி செய்யலாம்!

நடனத்தில் கலக்கும் தமன்னா:

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடனத்தில் கலக்கிய தமன்னா, அடுத்தடுத்து பல சூப்பர்ஹிட் ஐட்டம் பாடல்களில் நடனமாடி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இது இவருக்கு தனி அங்கீகாரத்தை பெற்று கொடுத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் எந்த இயக்குனரும் தமன்னாவை தொடர்பு கொள்வதற்கு அவரது வசீகரமான முகமும், உடலமைப்பும்தான்.

ஒரு நேர்காணலில், சமீபத்தில் தமன்னா, தான் நடனமாடும் காட்சியை திரையில் பார்க்காமல் பல சிறு குழந்தைகள் சாப்பிட மறுப்பதாக கூறினார். இதை தொடர்ந்து, தமன்னாவிடம் அழகு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில், உங்கள் முகப்பருவை எவ்வாறு குணப்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, நடிகை தமன்னா எதிர்பாராத விதமாக பதிலளித்தார். இது அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியது.

ALSO READ: மழைக்காலத்தில் முடி உதிர்வை தடுப்பது எப்படி? இயற்கை வழிமுறைகள் இதோ!

முகப்பரு:


முகப்பரு குறித்த கேள்விக்கு பதிலளித்த தமன்னா, “நான் காலையில் எழுந்ததும் எனக்கு முகப்பரு தோன்றும் போதெல்லாம், எனது எச்சிலை எடுத்து, அதன் மீது வைப்பேன். இது சிறந்த தீர்வை தரும்.” என்று பதிலளித்தார். தொடர்ந்து, அழகு குறிப்புகளை வெளியிட்ட தமன்னா, “1 டீஸ்பூன் காபி பொடி மற்றும் 1 டீஸ்பூன் இயற்கை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இந்த மாஸ்க் இறந்த சரும செல்களை நீக்கி, உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றும்.” என்றார். அப்படி இல்லையென்றால், “ரோஸ் வாட்டர், கடலை மாவு மற்றும் குளிர்ந்த தயிர் கலந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவலாம். சுமார் 10 நிமிடங்கள் உலரவிட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், உங்கள் முகம் பளபளக்கும்” என்று தெரிவித்தார்.