Tamannaah Bhatia: அந்த கேரக்டர் எனக்கு அதிர்ஷ்டம்.. தமன்னா சொல்வது எதை தெரியுமா?
Tamannaah Bhatia about Odela 2 Movie : நடிகை தமன்னாவின் முன்னணி நடிப்பில் தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் ஒடேலா 2. இந்த படத்தில் தமன்னா மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் விழாவில் நடிகை தமன்னா பேசிய விஷயம் இணையத்தல் வைரலாகி வருகிறது.

பான் இந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக கலக்கி வருபவர் தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia) . இவர் இறுதியாக தமிழில் சுந்தர் சி-யின் இயக்கத்தில் அரண்மனை 4 (Aranmanai 4 ) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, லீட் நாயகியாக ஒடேலா 2 (Odela 2) திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் அசோக் தேஜா (Ashok Teja) இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் கதை மற்றும் வசனத்தை பிரபல எழுத்தாளர் சம்பத் நந்தி எழுதியுள்ளார். இவரின் எழுத்திலும், இயக்குநர் அசோக் தேஜாவின் இயக்கத்திலும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் ந்த ஓடேலா 2 படமானது பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் போன்ற நிறுவனங்களின் கீழ் தயாரிப்பாளர் டி. மது தயாரித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியானது கடந்த 2025, ஏப்ரல் 8ம் தேதியில், மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. மேலும் இந்த ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் நடிகை தமன்னா பேசிய விஷயம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படமானது வரும் 2025, ஏப்ரல் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
ஓடேலா 2 படத்தின் ட்ரெய்லர் பதிவு :
#Odela2 is not just a sequel, it’s a cinematic force. 🤟#Odela2Trailer ▶️ https://t.co/2NGIRDmce3
The background score by @AJANEESHB gives goosebumps, amplifying every moment with pulse-pounding energy. 🔊💥💥@soundar16 ‘s cinematography is visually immersive — dark, rich,… pic.twitter.com/5LEtp7Lk6S
— 𝐕𝐚𝐦𝐬𝐢𝐒𝐡𝐞𝐤𝐚𝐫 (@UrsVamsiShekar) April 8, 2025
நடிகை தமன்னா பேசிய விஷயம் :
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நாயகி தமன்னா, “இந்தப் படம் எனக்கு மிகவும் அதிர்ஷ்டமானது” என்றார். இது போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு நடிகருக்கு வருவது மிகவும் அரிது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை எழுத்தாளர் சம்பத் நந்தி எழுதியிருக்கும் விதம் அற்புதம். இவ்வளவு அற்புதமான கதையில் என்னை ஒரு பகுதியாக மாற்றியதற்காக சம்பத் நந்திக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வசிஷ்ட சிம்ஹா மிகவும் அற்புதமான நடிகர்.
இந்தப் படங்களில் அவரது பாத்திரம் அற்புதம். அவர் தனது நடிப்பால் கடவுள் vs. தீமை சண்டையை வேறொரு உலகத்திற்கு எடுத்துச் செல்கிறது. இப்படத்தின் போது இயற்கையும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது. மேலும் இந்தப் படம் எனக்கு மிகவும் வித்தியாசமான பயணம். இந்த படமானது பிரம்மாண்ட கமர்ஷியல் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
மேலும் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நடிகை தமன்னா பாட்டியா தெரிவித்துள்ளார். தற்போது இந்த விஷயமானது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் மீது பலவித குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.