Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Boiled Eggs: வேகவைத்த முட்டைகளை எத்தனை நாட்கள் சாப்பிடலாம்? இவை எப்போது கெட்டுப்போகும்?

Boiled Eggs Storage: வேகவைத்த முட்டைகளை அதிக நேரம் வெளியே வைத்திருப்பது ஒரு பெரிய தவறு. முட்டைகளை வேகவைத்த பிறகு, உடனடியாக குளிர்ந்த நீரில் போடவும். இது அவற்றை விரைவாக குளிர்விக்கும். இதற்குப் பிறகு, 2 மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டியது அவசியம்.

Boiled Eggs: வேகவைத்த முட்டைகளை எத்தனை நாட்கள் சாப்பிடலாம்? இவை எப்போது கெட்டுப்போகும்?
வேகவைத்த முட்டைகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Jan 2026 16:28 PM IST

முட்டைகள் (Eggs) ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவை ஒரு சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. முட்டைகள் எல்லா வயதினருக்கும் ஏற்றது. இவற்றில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதை தினசரி எடுத்து கொள்வது ஆரோக்கியத்தை தரும். வேகவைத்த முட்டைகளில் தோராயமாக 70 முதல் 80 கலோரிகள், 6 முதல் 7 கிராம் புரதம் (protein)ற்றும் 5 கிராம் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. மேலும், இதில் வைட்டமின்கள் டி மற்றும் பி12, இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், காலையில் முட்டைகளை வேகவைத்து இரவில் அல்லது மறுநாள் சாப்பிடலாமா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். அவற்றை எத்தனை நாட்கள் வைத்து சாப்பிடலாம்? எப்போது கெட்டுப்போகும்? உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஒரு தனிமனிதன் ஏற்படுத்தும் உணவுக் கழிவுகள் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

வேகவைத்த முட்டைகளை எத்தனை நாள் வரை சாப்பிடலாம்?

சரியாக வேகவைத்த முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால் 7 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அதாவது, வேகவைத்த முட்டைகள் ஓட்டில் இருந்தாலும் சரி அல்லது உரிக்கப்பட்டாலும் சரி பாதுகாப்பாக எடுத்து கொள்ளலாம் . இருப்பினும், சுவை மற்றும் ஊட்டச்சத்து முழுமையாக பெற விரும்புவோர், 2 முதல் 3 நாட்களுக்குள் வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவது நல்லது. பாதி வேகவைத்த அல்லது மென்மையாக வேகவைத்த முட்டைகளை உடனக்குடன் எடுத்து கொள்வது நல்லது.

வேகவைத்த முட்டைகளை அதிக நேரம் வெளியே வைத்திருப்பது ஒரு பெரிய தவறு. முட்டைகளை வேகவைத்த பிறகு, உடனடியாக குளிர்ந்த நீரில் போடவும். இது அவற்றை விரைவாக குளிர்விக்கும். இதற்குப் பிறகு, 2 மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டியது அவசியம். வெளியே வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால், ஒரு மணி நேரத்திற்குள் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலை எப்போதும் 4 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் பாக்டீரியாக்கள் வளராது.

குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை எங்கே வைப்பது பாதுகாப்பானது..?

வேகவைத்த முட்டைகளை உரித்து எடுத்து வைப்பது பாதுகாப்பானது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்த முறை சரியானதல்ல. முட்டைகளை அவற்றின் ஓடுகளுடன் வைப்பது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் முட்டை ஓடு இயற்கையான பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது. இது குளிர்சாதன பெட்டியின் நாற்றங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிலிருந்து முட்டையைப் பாதுகாக்கிறது. நீங்கள் முன்கூட்டியே முட்டைகளை உரித்து குளிர்ந்த நீரில் போட்டு வையுங்கள். அப்படி இல்லையென்றால், ஈரமான துணியை சுற்றி காற்று புகாத கொள்கலனில் வைக்கலாம்.

ALSO READ: தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறீர்களா? அப்போ ஜாக்கிரதை!!

பலர் முட்டைகளை ஃப்ரிட்ஜ் கதவில் உள்ள தட்டில் வைக்கிறார்கள். ஆனால் இது சரியான இடம் அல்ல. கதவைத் திறப்பதால் வெப்பநிலை மீண்டும் மீண்டும் மாறுகிறது. இதனால் முட்டைகள் விரைவாக கெட்டுவிடும். அது வேகவைத்த முட்டைகளாக இருந்தாலும் சரி, சாதாரண முட்டைகளாக இருந்தாலும் சரி. எப்போது காற்று புகாத கொள்கலனில் வைக்க வேண்டும். இது முட்டைகளை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கிறது. இது நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்கும்.

கெட்ட முட்டைகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். இது உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கும். வேகவைத்த முட்டையில் கடுமையான வாசனை அல்லது அழுகிய வாசனை இருந்தால், அதை உடனடியாக தூக்கி எறியுங்கள். அத்தகைய முட்டைகளை சாப்பிடுவது ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும்.