Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Egg Shells Advantages: முட்டை ஓடுகளை குப்பையில் வீசுகிறீர்களா? வேண்டாம்! இந்த நன்மைகளை அள்ளி தரும்!

Egg Shells Health Benefits: முட்டை ஓடுகளும் பல உடல்நலப் பிரச்சினைகளைப் போக்கவும் உதவியாக இருக்கும். ஒரு ஆய்வின்படி, முட்டை ஓடுகளில் கால்சியம் கார்பனேட், புரதம் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. ஒவ்வொரு முட்டை ஓட்டிலும் தோராயமாக 40 சதவீதம் கால்சியம் இருப்பதாகவும், அரை முட்டை ஓடு ஒரு வயது வந்தவரின் தினசரி கால்சியம் தேவையை எளிதில் பூர்த்தி செய்யும்.

Egg Shells Advantages: முட்டை ஓடுகளை குப்பையில் வீசுகிறீர்களா? வேண்டாம்! இந்த நன்மைகளை அள்ளி தரும்!
முட்டை ஓடுகளின் நன்மைகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Dec 2025 16:22 PM IST

முட்டையில் (Eggs) பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் (Nutrients) நிறைந்துள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனால்தான் முட்டைகளை தினசரி நம் வாழ்க்கையில் எடுத்து கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், ஆரோக்கியம் என்று கருதும்போது நாம் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கருவில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அதேநேரத்தில், முட்டையை உடைத்து ஊற்றிய பிறகு, அதன் ஓடுகளை குப்பையாகக் கருதி தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கருவை கடந்து, முட்டை ஓடுகளும் தங்களுக்குள் அதிக நன்மைகளை கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா..?

முட்டை ஓடுகளும் பல உடல்நலப் பிரச்சினைகளைப் போக்கவும் உதவியாக இருக்கும். ஒரு ஆய்வின்படி, முட்டை ஓடுகளில் கால்சியம் கார்பனேட், புரதம் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. ஒவ்வொரு முட்டை ஓட்டிலும் தோராயமாக 40 சதவீதம் கால்சியம் இருப்பதாகவும், அரை முட்டை ஓடு ஒரு வயது வந்தவரின் தினசரி கால்சியம் தேவையை எளிதில் பூர்த்தி செய்யும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ: ஆரோக்கியமான இந்த உணவுகள்.. கல்லீரலுக்கு தொல்லை தருமா..?

முட்டை ஓடுகளின் நன்மைகள்..

எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது:

முட்டை ஓடுகளில் கால்சியம் கார்பனேட் நிறைந்துள்ளது. இது உடலில் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. மேலும், முட்டை ஓடுகள் மெக்னீசியம், ஃவுளூரைடு மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்களின் நல்ல மூலமாகும்.

ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கும்:

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறும் ஒரு நோயாகும். உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் ஆஸ்டியோபோரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்சியம் குறைவாக உள்ள உணவு இந்த பிரச்சனைக்கு வழிவகுக்கும். ஆஸ்டியோபோரோசிஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, உங்கள் உணவில் முட்டை ஓடுகளை சேர்த்து கொள்ளலாம். முட்டை ஓடுகளில் ஏராளமான கால்சியம் உள்ளது. இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

மூட்டு ஆரோக்கியம்:

முட்டை ஓடுகள் மூட்டு ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் முட்டை ஓடு பொடியை உட்கொள்ள விரும்பினால், அதனுள் இருக்கும் வெள்ளை சவ்வுகளை அகற்றாமல் இருப்பது நல்லது. இது மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

முட்டை ஓடுகளை எப்படி சாப்பிடுவது?

முட்டை ஓடுகளை சாப்பிடுவதற்கான சிறந்த வழி, முதலில் அவற்றை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அவற்றை துண்டுகளாக உடைத்து பொடியாக அரைத்து கொள்ளவும். நீங்கள் அவற்றை உணவு, சாறு அல்லது தண்ணீருடன் கலந்து உட்கொள்ளலாம். இருப்பினும், உங்கள் உணவில் முட்டை ஓடுகளை சேர்ப்பதற்கு முன்பு நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

ALSO READ: இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து.. இந்த 7 உணவுகளை ஏன் தவிர்ப்பது நல்லது?

சரும பிரச்சனையை சரிசெய்யும்:

உங்கள் சருமத்தை சுத்தப்படுத்த, முட்டை ஓடு பொடியை வினிகருடன் கலந்து பேஸ்ட் தயாரிக்கலாம். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்தவதன்மூலம் உங்கள் சருமம் பளபளப்பாக மாறும். கரும்புள்ளிகளுக்கு இயற்கையான சிகிச்சையாக, முட்டை ஓடு பொடியை எலுமிச்சை சாறு அல்லது வினிகருடன் கலந்து தடவுவது, கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், தொற்று அபாயத்தையும் குறைக்கும்.