Health Tips: இரவில் தூங்க செல்வதற்கு முன் சூடான பால்.. இன்றே தொடங்கினால் இவ்வளவு நன்மைகளா?
Benefits of Drinking Milk Before Sleep: தூங்க செல்வதற்கு முன்பு மஞ்சள் கலந்த சூடான பால் குடித்தால், இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.இரவில் தூங்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மஞ்சள் கலந்த பாலை முயற்சி செய்யலாம். இது உங்களுக்கு பல வழிகளில் நன்மைகளை தரும்.
தூங்க செல்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் சூடான பால் (Drinking Milk) குடிக்கும்போது இரவு நேரங்களில் ஓய்வெடுக்கவும், பதட்டத்தைப் போக்கவும், நிம்மதியான இரவு தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது. பலரும் இரவு நேரங்களில் தூங்க செல்வதற்கு முன்பு, பால் குடிப்பதைத் தவிர்க்கிறார்கள். அதேநேரத்தில், சிலர் தூங்க செல்வதற்கு முன்பு பால் குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் இது முற்றிலும் உண்மை இல்லை. தூங்க செல்வதற்கு முன் பால் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் சூடான பால் குடிப்பதன் மூலம் சில கூடுதல் நன்மைகளைப் பெறுவீர்கள். இரவில் தூங்குவதில் (Night Sleeping) சிரமம் உள்ளவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான பால் குடிக்கலாம். அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தோல் முதல் முடி வரை! நெல்லிக்காய் மட்டுமல்ல.. விதைகளும் ஒரு பொக்கிஷம்!
மஞ்சள் கலந்த பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
தூங்க செல்வதற்கு முன்பு மஞ்சள் கலந்த சூடான பால் குடித்தால், இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.இரவில் தூங்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மஞ்சள் கலந்த பாலை முயற்சி செய்யலாம். இது உங்களுக்கு பல வழிகளில் நன்மைகளை தரும். பாலில் டிரிப்டோபான் உள்ளது. பாலை சிறிது சூடாக்கும் போது, இந்த பொருள் நமது நரம்புகளை தளர்த்த உதவுகிறது. இது நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். டிரிப்டோபன் என்பது ஒரு வகை அமினோ அமிலம் ஆகும். இது செரோடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த இரண்டு பொருட்களும் நரம்புகளை தளர்த்தி, நல்ல இரவு தூக்கத்தைப் பெற உதவுகின்றன.




சூடான பால் குடிக்கும் பழக்கம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே நீங்கள் மிகவும் சோர்வாகவும் சோம்பேறிதனமாக இருக்கும்போதும், இரவில் தூங்க செல்வதற்கு முன் சூடான பால் குடிக்கலாம். பாலில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. எனவே, தொடர்ந்து பால் குடிப்பது உங்கள் எலும்பு அமைப்பை வலுப்படுத்தும். எலும்பு அடர்த்தி இழப்பைத் தடுக்க உதவும்.
ALSO READ: குளிரில் கை விரல்களும் கால்விரல்களும் வீங்குகின்றதா? சரிசெய்யும் எளிய சூப்பர் டிப்ஸ்!
தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் பலர் தசை காயங்கள் மற்றும் சிராய்ப்புகளால் பாதிக்கப்படுகின்றனர். சூடான பாலுடன் மஞ்சளை கலக்கும் பழக்கம் இந்த காயங்களை சிறிது காலத்திலேயே குறைக்க உதவும். அமிலத்தன்மை, வாயு மற்றும் வயிறு உப்புசத்தால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் லேசான சூடான பால் குடிக்கலாம். தூங்க செல்வதற்கு முன் சூடான பால் குடிப்பதால் உங்கள் உடலுக்கு சரியான அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கிடைக்கும். எனவே உங்கள் உடல் இரவு முழுவதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.