Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

New Year 2026: சென்னையில் புத்தாண்டு கொண்டாட திட்டமா..? பீச் முதல் கிளப் வரை! இங்கு கலகலப்பு களைகட்டும்!

Best New Year parties in Chennai 2026: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்னையிலும் அதைச் சுற்றியும் பல இடங்கள் உள்ளன. அவற்றை உங்கள் விருப்பப்படி நீங்கள் தேர்வு செய்யலாம். அதன்படி, 2026ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள சிறந்த சுற்றுலா தலங்களை பற்றி தெரிந்து கொள்வோம். 

New Year 2026: சென்னையில் புத்தாண்டு கொண்டாட திட்டமா..? பீச் முதல் கிளப் வரை! இங்கு கலகலப்பு களைகட்டும்!
சென்னை புத்தாண்டு கொண்டாட்டம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Dec 2025 09:00 AM IST

கிறிஸ்துமஸ் (Christmas) முடிந்த கையோடு நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒன்று 2026 ஆங்கில புத்தாண்டு. இந்த 2026ம் புதிய ஆண்டில் கடந்த 2025 வருடத்தில் நாம் கடந்து வந்த பாதைகளையும், தருணங்களையும் நினைவுகளை நினைவு படுத்தி கொண்டாடி, புத்தாண்டை (New Year 2026) முழு உற்சாகத்துடன் வரவேற்போம். அந்தவகையில், 2026ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. நீங்களும் சென்னையில் இருந்தால், நகரத்தில் கொண்டாட்டத்தை அனுபவிக்க பல்வேறு ஆசைகளுடன் காத்திருந்தால், சென்னையை சுற்றியுள்ள இடங்களுக்கும் செல்லலாம். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்னையிலும் அதைச் சுற்றியும் பல இடங்கள் உள்ளன. அவற்றை உங்கள் விருப்பப்படி நீங்கள் தேர்வு செய்யலாம். அதன்படி, 2026ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள சிறந்த சுற்றுலா தலங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

எளிமையான இடங்கள் முதல் 5 ஸ்டார் ஹோட்டல்கள் வரை:

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல இடங்கள் உள்ளன. இதில், மிடில் க்ளாஸ் மக்கள் அனைத்து தரப்பு மக்களுடன் கொண்டாட மெரினா பீச், பெசண்ட் நகர் பீச், திருவான்மியூர் ஆர்.டி.ஓ பீச் என பெரியளவில் பணம் எதுவும் செலவு செய்யாமல் புத்தாண்டை அன்புடன் வரவேற்கலாம். இங்கெல்லாம், போதிய காவல்துறையினரின் பாதுகாப்பை தமிழக அரசு ஆண்டுதோறும் செய்து வருகிறது.

ALSO READ: புத்தாண்டு கொண்டாட்டம்… எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை… புதுச்சேரி அரசு விதித்த கட்டுப்பாடுகள்

ஹோட்டல்கள் & கிளப்புகள்:

தி பீச் டெரஸ்:

  • தேதி: டிசம்பர் 31, 2025
  • நேரம்: மாலை 7:00 மணி முதல் இரவு 1.00 மணி வரை
  • முகவரி: தி பீச் டெரஸ்,
  • ஈஞ்சம்பாக்கம், சென்னை.
  • தனிநபர் டிக்கெட்: ரூ. 999/- இலிருந்து தொடங்குகிறது.

பார்ட்டி பாரடைஸ்:

  • தேதி: டிசம்பர் 31, 2025
  • நேரம்: இரவு 8:00 மணி முதல்
  • முகவரி: விந்தம் எழும்பூர், சென்னை
  • டிக்கெட்: ரூ.2799/- இலிருந்து தொடங்குகிறது.

EA மால்:

  • தேதி: டிசம்பர் 31, 2025
  • நேரம்: மாலை 7:00 மணி முதல்
  • முகவரி: எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், சென்னை
  • டிக்கெட்: ரூ. 710/- இலிருந்து தொடங்குகிறது.

எம்ஜிஎம் பீச் ரிசார்ட்ஸ்:

  • தேதி: டிசம்பர் 31, 2025
  • நேரம்: மாலை 7:00 மணி முதல்
  • முகவரி: எம்ஜிஎம் பீச் ரிசார்ட்ஸ், சென்னை
  • டிக்கெட்: ரூ. 3,999/- இலிருந்து தொடங்குகிறது.

ALSO READ: தொடர் விடுமுறை-பண்டிகைகள்…சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!

தி பார்க் ஹோட்டல்:

  • தேதி: டிசம்பர் 31, 2025
  • நேரம்: மாலை 7:00 மணி முதல்
  • முகவரி: தி பார்க் ஹோட்டல், நுங்கம்பாக்கம், சென்னை
  • டிக்கெட்: ரூ. 3,333/- இலிருந்து தொடங்குகிறது.

இது தவிர லீலா பேலஸ், ஐடிசி கிராண்ட் சோழா, தி ரேடிசன் ப்ளூ ஹோட்டல் போன்ற நட்சத்திர ஹோட்டல்களிலும் புத்தாண்டை சரியாக இரவு 12 மணிக்கு வரவேற்கலாம்.