சில நேரங்களில் மறக்க முடியாத வாழ்க்கைத் தருணங்கள் மிகவும் எளிமையான முறையில் நம்மை வந்து சேரும். அந்த வகையில், தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆட்டோ ஓட்டுநருடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, ஒரு சிறிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் போது தனது ஆட்டோ ஓட்டுநரையும் உடன் அழைத்துச் சென்றேன் என குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.