உலகில் மிகக் குளிரான நகரம் எது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? பூமியில் பல கடும் குளிர் பகுதிகள் இருந்தாலும், அதிகமான பனிக்குளிர் நிலை என்றால் சைபீரியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள யாகுட்ஸ்க் நகரமே முதலிடத்தில் உள்ளது. சுமார் மூன்று லட்சத்து ஐம்பத்தி ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் இந்த நகரில், ஆண்டின் பெரும்பகுதியை குளிர்காலமே ஆட்சி செய்கிறது. இங்குள்ள வெப்பநிலை மனிதர்கள் தாங்கும் எல்லையை சவாலிடும் அளவுக்கு குறைகிறது.